விமான விபத்துக்கு முன் 2முறை தரை இறக்க முயற்சித்த விமானி.! உயிரிழந்த பைலட் தங்கப்பதக்கம் பெற்றவர்.!

Published : Aug 08, 2020, 09:01 AM ISTUpdated : Aug 08, 2020, 09:37 AM IST
விமான விபத்துக்கு முன் 2முறை தரை இறக்க முயற்சித்த விமானி.! உயிரிழந்த பைலட் தங்கப்பதக்கம் பெற்றவர்.!

சுருக்கம்

கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியான, விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதே, இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட்டாக இருந்தவர்.தொழில்நுட்பம் வல்லுநர் இதற்காக இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

"வந்தே பாரத்" திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, விழுந்து விபத்துக்குள்ளானது. நேற்று இரவு 7.40 மணியளவில், நடந்த இந்த விபத்தில், விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், விமானி விங் கமாண்டர், தீபக் வசந்த் சாதே, குழந்தை உட்பட 16 பேர் பலியாகி உள்ளனர்.

விமான விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.இங்குள்ள விமான நிலையம் "டேபிள் டாப்" அமைப்பு கொண்டது. மலை மீது அமைந்துள்ள விமான நிலையம் இது. இதன் ரன்வே மற்ற விமான நிலையங்களை விட பாதுகாப்பு அற்றதாகவே இருந்துள்ளது. பலமுறை விமானபாதுகாப்பு அதிகாரிகள் இதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.இரண்டு முறை இந்த விமானம் தரையிறங்க முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விமானத்தை இயக்கிவந்த விமானி இந்திய விமானப்படையில் பணியாற்றியவர் கமாண்டர் தீபக் வசந்த் சாதே. ஏர் இந்தியாவில் பணிக்கு சேரும் முன், இந்திய விமானப் படையின் பைலட்டாக இருந்துள்ளார்.இவர் மிகவும் தொழில் நிபுணத்துவம் வாய்ந்தவர். அவருக்கு 58 என்டிஏ தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையில் சோதனை பைலட்டாக இருந்தவர் என்று சொல்லப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

அதிமுக + காங்கிரஸ் + தவெக... அதிர வைக்கும் இபிஎஸின் அண்டர்டீலிங்..? திணறும் திமுக - பதறும் பாஜ..!
100 நாள் வேலையில் முதலில் காந்தி பெயரையே வைக்கவில்லை.. தனி உலகில் வாழும் ஸ்டாலின்.. அண்ணாமலை அட்டாக்!