23-ம் தேதியில் 23-ம் புலிகேசியான மு.க.ஸ்டாலின்... போராட்டத்தை பங்கம் செய்த மருது..!

By Thiraviaraj RMFirst Published Dec 23, 2019, 5:44 PM IST
Highlights

 23ம் தேதியில் 23-ம் புலிகேசியை கண்முன் நிறுத்திய மு.க.ஸ்டாலின் என திமுக நடத்திய குடியுரிமை சட்டமசோதாவை திரும்பப்பெறக்கோரி நடைபெற்ற போராட்டத்தை விமர்சித்துள்ளார் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ். 

இன்று நடைபெற்ற போராட்டம் சிறப்பாக நடைபெற்றது என்னும் வகையில் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார் இதுகுறித்து அவர், ‘’பேரணிக்கு வருபவர்களை மிரட்டும் வகையில் பல்லாயிரக்கணக்கான காவலர்களை நிறுத்தினார்கள். என்னைப் பொறுத்தவரையில் பத்தாயிரம் போலீஸார், குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டதாகவே நான் கருதுகிறேன். அவர்களுக்கும் நன்றி.

அதைப்போலத்தான் இன்று நாம் தொடங்கி இருக்கும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத் திருத்த எதிர்ப்புப் போராட்டமானது இந்த சட்டத்தை திருப்பப் பெறும் வரைக்கும் ஓயப்போவது இல்லை! ஏதோ ஒரு நாள் ஆர்ப்பாட்டம் செய்தோம்,பேரணி நடத்தினோம், கண்டனக்கூட்டம் நடத்தினோம் என்பதோடு முடியப் போவதில்லை. இது இந்த நாட்டின், ஜனநாயகத்தைக் காக்கின்ற போர். சமத்துவத்தைக் காக்கின்ற போர். மதச்சார்பின்மையைக் காக்கின்ற போர்.தமிழர்களைக் காக்கின்ற போர். தீரம் மிக்க இந்த போர் தொடரும். இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு திரும்பப் பெறும் வரை தொடரும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்தப்பேரணி குறித்து நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் தனது ட்விட்டர் பதிவில், ’’கேலியாகி போன போலி பேரணி.. கூவி கூவி அழைத்தும், கூலிக்கு ஆள் பிடித்தும், மீம்ஸ்-க்கு கன்டன்ட் தேடி வந்தவர்களை கழித்து விட்டு பார்த்தால் காவலர்கள் எண்ணிக்கையில் கால்வாசியே.!
ஆனாலும் அச்சுபிசகாமல் 23-ம் புலிகேசியை கண்முன் நிறுத்திய ஸ்டாலின். அதுவும் சரியாக 23-ம் தேதியில்..’’ எனத் தெரிவித்துள்ளார்.
 

கேலியாகி போன போலி பேரணி.. கூவி கூவி அழைத்தும், கூலிக்கு ஆள் பிடித்தும், மீம்ஸ்-க்கு கன்டன்ட் தேடி வந்தவர்களை கழித்து விட்டு பார்த்தால் காவலர்கள் எண்ணிக்கையில் கால்வாசியே.!

ஆனாலும் அச்சுபிசகாமல் 23-ம் புலிகேசியை கண்முன் நிறுத்திய ஸ்டாலின். அதுவும் சரியாக 23-ம் தேதியில்..!

ஆக..🤣 pic.twitter.com/QcoiMJ0aFG

— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj)

click me!