ஸ்டாலின் போட்ட டபுள் ஸ்கெட்ச்! உள்ளாட்சி தேர்தலில் பக்காவாக ஸ்கோர் செய்யும் தி.மு.க: நொந்து நூடுல்ஸாகும் எடப்பாடியார் டீம்.

By Vishnu PriyaFirst Published Dec 23, 2019, 5:42 PM IST
Highlights

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஸ்டாலின் இந்தளவுக்கு உக்கிரம் காட்டி போராடிட இரண்டு காரணங்கள் உள்ளன. 

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஸ்டாலின் இந்தளவுக்கு உக்கிரம் காட்டி போராடிட இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று : இரண்டு  மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசுக்கு எதிராக ஒரு பெரும் ஆர்பாட்டத்தை ஸ்டாலின் திரட்டினார். அப்போது கவர்னரை சந்தித்த அவர், வெளியே வந்து அப்படியே தலைகீழாக ஸ்டண்ட் அடித்து போராட்டத்தை ஒத்தி வைத்தார். இதன் பின்னணியில் ‘ஸ்டாலினிடம் கவர்னர் சில ஃபைல்களை காட்டினார். அது ஸ்டாலின் குடும்பம் உட்பட, தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த விபரங்களை சொல்லும் பட்டியல். சிதம்பரம் போல் உங்களையும் கைது செய்ய வேண்டி வரும்’ என்று சொல்லப்பட்டதாலேயே ஸ்டாலின் பம்மி பதுங்கினார்! என்று விமர்சிக்கப்பட்டது.  இதை  உறுதிப்படுத்துவது போலவே ஸ்டாலினின் செயல்கள் வரிசையாக அமைந்தன. மாமல்லபுரம் வந்த மோடியை பாராட்டியது உள்ளிட்ட சில விஷயங்கள் இப்படித்தான் இருந்தன. எனவே மக்களும் ‘அ.தி.மு.க. போல் தி.மு.க.வும் மத்திய அரசிடம் சரணடைந்துவிட்டது. அவர்கள் எந்த ரெய்டுக்கு பயப்படுகிறார்களோ அதே ரெய்டுக்குதான் இவர்களும் பயக்கிறார்கள்!’ என்று விமர்சித்தனர். இந்த அவப்பெயரை போக்க வேண்டுமென்பது ஸ்டாலினின் எண்ணம். 


குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஸ்டாலின் கிளர்ந்து எழ இரண்டாவது காரணம், இது ஊரக உள்ளாட்சி தேர்தல் நேரம். இதில் முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை முழுமையாக பெறுவதற்காக இந்த சட்ட மசோதாவை வன்மையாக எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். கிராமங்களில் சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை அதிகம் இருக்காதுதான், அதனால்தான் ’இன்று முஸ்லீம்களின் தலையில் கை வைக்கும்  மோடி அரசு, நாளையே தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் தலையில் கை வைக்கும்.’ என்று வீரிய பிரசாரம் ஒன்றையும் இதில் எடுத்துவிட்டு அதகளம் செய்து கொண்டிருக்கின்றனர். ஸ்டாலின் எதிர்பார்த்தது போலவே இந்த எதிர்ப்பு அவருக்கு கை கொடுக்க துவங்கிவிட்டது. அய்யம்பேட்டை எனுமிடத்தில்  ஒரு பள்ளிவாசலின் ஜமாத்தினர், கிராமம் கிராமமாக சென்று ‘அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதீர்கள். மோடி மற்றும் எடப்பாடி இருவருமே முஸ்லீம்களின் எதிரி.’ என்று வெளிப்படையாக அறிவிப்க்கும் வீடியோவானது வைரலாகிக் கொண்டிருக்கிறது. 


ஆக ஸ்டாலின் தான் போட்ட ஸ்கெட்சில் பக்காவாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்! என்பதே உண்மை. ஸ்டாலினின் இந்த திட்டத்தை தெளிவாக புரிந்து கொண்ட நிலையில்தான் குய்யோ முறையோ என்று ஆளுங்கட்சி தரப்பு இப்போது ஸ்டாலினை எதிர்த்து விமர்சிப்பதோடு, ‘முஸ்லீம்களுக்கு ஆபத்து! என்று பொய்யாக பிரசாரம் செய்கிறார் ஸ்டாலின்.’ என்று புலம்பிக் கொட்டுகின்றனர்.ஆனால் மக்கள் மற்றும் இளைஞர்களின் மனமோ ஸ்டாலினின் தரப்பையே அதிகம் நம்புகிறது!

click me!