பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல... மோடி அரசை வச்சு செய்த ப.சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Dec 23, 2019, 5:43 PM IST
Highlights

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்ற கட்சியினருக்கும், அமைப்புகளுக்கும் நன்றி. தேசத்திற்கு தற்போது வந்திருப்பது ஏதோ சாதாரண பிரச்சனை அல்ல, குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. இந்துக்களுக்கு அனுமதி, ஆனால், இலங்கை இந்துக்களுக்கு அனுமதி இல்லை. இதற்கு தர்க்கரீதியாக நியாயம் கற்பிக்க முடியாது என்றார். 

பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாதது அல்ல, எதிர்க்கட்சிகள் ஓரணியாக இணைந்தால் தோற்கடிக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்ற கட்சியினருக்கும், அமைப்புகளுக்கும் நன்றி. தேசத்திற்கு தற்போது வந்திருப்பது ஏதோ சாதாரண பிரச்சனை அல்ல, குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. இந்துக்களுக்கு அனுமதி, ஆனால், இலங்கை இந்துக்களுக்கு அனுமதி இல்லை. இதற்கு தர்க்கரீதியாக நியாயம் கற்பிக்க முடியாது என்றார். 

மேலும், ஜார்கண்ட் மாநிலத்தை மட்டும் தனியாக பார்க்க முடியாது. கடந்த 3 மாதங்களில் அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில தேர்தல் முடிவுகளை சேர்த்தே பார்க்கவேண்டும். இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக தனிப்பெரும் செல்வாக்குடன் ஆட்சியில் இருந்தது. அத்தனை பலம் இருந்தும் அரியானாவில் 31 இடங்கள் தான் கிடைத்தது.

அரியானாவில், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஆட்சி அமைத்துள்ளனர். அது நிலையான ஆட்சி இல்லை. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் ஆட்சி அமைந்துள்ளது. மகாராஷ்டிராவில் புழக்கடை வழியாக ஆட்சி அமைக்க பாஜக முயன்றபோது தோற்கடிக்கப்பட்டது என விமர்சித்தார். பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல, எதிர்க்கட்சிகள் ஓரணியாக இணைந்தால் தோற்கடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

click me!