மு.க.ஸ்டாலின் என்னை எதிரியாக பார்ப்பதே எனக்கு பெருமை... திமுகவை வெறுப்பேற்றும் எஸ்.பி.வேலுமணி..!

By vinoth kumarFirst Published Jan 28, 2020, 5:31 PM IST
Highlights

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சித்ததற்காக, திமுக நிர்வாகி முத்துலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் வேலுமணியின் தலையில், 'அதிகாரம்' என்ற 'ஆணவம்' கூடுகட்டிக் கொண்டிருப்பதால், அவரை எதிர்த்துப் போராடினாலோ, குறை சொன்னாலோ, கைது என்ற அடக்குமுறையை ஏவிவிடுகிறார். 

ஒரு பெரிய தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் என்னை எதிரியாக பார்ப்பதே தமக்கு பெருமையாக இருப்பதாக என உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். 

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சித்ததற்காக, திமுக நிர்வாகி முத்துலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் வேலுமணியின் தலையில், 'அதிகாரம்' என்ற 'ஆணவம்' கூடுகட்டிக் கொண்டிருப்பதால், அவரை எதிர்த்துப் போராடினாலோ, குறை சொன்னாலோ, கைது என்ற அடக்குமுறையை ஏவிவிடுகிறார். 

இது மிகவும் வெட்கக்கேடானது. கோவையிலும், தமிழகத்தின் வேறு பகுதிகளிலும் வேலுமணிக்கு எதிராக, ஏதேனும் உண்மைச் செய்தியை வெளியிட்டால் பத்திரிகையாளரைக் கைது செய்வது, வழக்குப் போட்டால் அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைப்பது, எதிர்த்துப் பேசும் திமுகவினரைச் சிறைப் பிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபடுகின்றனர்.

அமைச்சர் பதவிக்கு இன்னும் 18 மாதங்கள்தான் எஞ்சியிருக்கிறது. அதன்பின், வேலுமணிக்காக இப்போது பொய் வழக்குப் போடும் போலீஸ் அதிகாரிகள், சட்டப்படியான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது. வேலுமணியை எதிர்த்து விமர்சிப்பதற்காக, திமுகவினர் கைது செய்யப்பட்டால் நானே கோவைக்குச் சென்று மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். ஏற்கனவே எம்சாண்ட் பயன்படுத்தியதில் 1000 கோடி ஊழல் செய்திருப்பதாகவும். இது உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை ஓய்வு பெற்றாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் அவற்றின் நிலை குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி;- ஒரு பெரிய தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் என்னை எதிரியாக பார்ப்பதே தமக்கு பெருமையாக இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி, இன்று உயிரோடு இருந்திருந்தால், 107 விருதுகளை உள்ளாட்சி துறை பெற்றுள்ளதையும், தமிழ்நாடு சிறந்த மாநிலம் விருது பெற்றுள்ளதையும் பார்த்து நிச்சயம் பாராட்டியிருப்பார் என்றார். திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறையில் பல மடங்கு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். வேண்டுமென்றே என் மீது பல பொய் வழக்குகள் போடப்படுகின்றன என எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். 

click me!