10 ஆண்டுக்கான தொலைநோக்கு செயல்திட்டம்... 7ம் தேதி மாபெரும் அறிவிப்பை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்...!

Published : Mar 01, 2021, 11:05 AM IST
10 ஆண்டுக்கான தொலைநோக்கு செயல்திட்டம்... 7ம் தேதி மாபெரும் அறிவிப்பை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்...!

சுருக்கம்

வரும் 7ம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கவுள்ளேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

வரும் 7ம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கவுள்ளேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 68வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, அவரது பிறந்தநாளுக்கு கமல், ரஜினிகாந்த், ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்;- எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி.இன்னும் 2 மாதங்களில் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் நடைபெற இருக்கிறது. நேற்று முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தின் 10 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையை திருச்சி கூட்டத்தில் அறிவிக்கிறேன்.  தமிழகத்திற்கான எனது தொலைநோக்கு பார்வையை 2 கோடி குடும்பங்களிடம் கொண்டு சென்று சேர்க்க உள்ளோம். திருச்சியில் வரும் 7ம் தேதி மாநாடுக்கு பதில் திமுக கூட்டம் பிரமாண்டமாக நடக்கும் என்றார்.

PREV
click me!

Recommended Stories

Jantar Mantar Protest: 'ஹிட்' அடிச்சாலும் சாகாத கரப்பான் பூச்சிகள் நாங்கள்! - தலை நகரில் போராட்டம்
Latha Rajinikanth: அண்ணாமலைக்கு போட்டியாக புதிய இயக்கம்? அரசியலில் குதிக்கிறாரா லதா ரஜினிகாந்த்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்.!