அரசியில் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை.. தலைமை செயலகத்தில் ஏற்பாடு.

By Ezhilarasan BabuFirst Published Mar 1, 2021, 10:41 AM IST
Highlights

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5  5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்கான பிரச்சாரம், தொகுதி பங்கீடு,  கூட்டணி பேச்சுவார்த்தை என மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. வேட்புமனுத் தாக்கல் 12ஆம் தேதி தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 19ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு மறு பரிசீலனை மார்ச் 20ஆம் தேதி என்றும், வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் 22ஆம் தேதி என்றும், வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி என்றும், அதற்கான முடிவு மே 2ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இதே அட்டவணையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று 12:30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தேர்தல் வழிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் அதன் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!