அமித் ஷாவின் எளிமை... ரோட்டோரக் கடையில் டீ சாப்பிட்டு உற்சாகம்..!

Published : Mar 01, 2021, 10:11 AM IST
அமித் ஷாவின் எளிமை... ரோட்டோரக் கடையில் டீ சாப்பிட்டு உற்சாகம்..!

சுருக்கம்

மதுராந்தகம் அருகே இயற்கை உணவகத்தில் உணவு அருந்திய அமித்ஷா இயற்கை உற்பத்தி பொருட்கள் விற்பனையகத்தையும் பார்வையிட்டார்.

புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில்  தேர்தல் பரைப்புரைக்காக வந்துள்ள அமித் ஷா பரபரப்பான சூழலில் சாலையோர ஹோட்டலில் ‘ஒரே காபி’ அருந்தி தனது எளிமையை வெளிப்படுத்தி இருக்கிறார். 

விழுப்புரம் பொதுக்கூட்டம் முடித்துக்கொண்டு, சாலை மார்க்கமாக சென்னை வந்து கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாலையில் உள்ள  உணவகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் இரவு உணவருந்தினார். மதுராந்தகம் அருகே இயற்கை உணவகத்தில் உணவு அருந்திய அமித்ஷா இயற்கை உற்பத்தி பொருட்கள் விற்பனையகத்தையும் பார்வையிட்டார்

.

இந்த புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ராம சுகந்தன் தனது டிவிட்டரில், “தேனீர் கோப்பையைப் பார்த்தால் சாலையோர கடை மாதிரி தெரியவில்லை மேற்கு வங்காளத்தில் ஏழை தொண்டர்கள் வீட்டில் சாப்பிடுவது மாதிரி 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுவார் . இங்கு யார் வீட்டிலோ செய்த உணவை சாலை ஓரமாக உட்கார்ந்து சாப்பிட்ட நாடகம்!” எனப் பதிந்துள்ளார். அது மட்டுமின்றி இதில் அமித்ஷா உள்ளிட்ட முக்கியமான தலைவர்களுக்கு தனியான விரிப்புக்களுடன் கூடிய மேஜை மற்றுமுள்ள தலைவர்களுக்குச் சாதாரண மேஜை என்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!