அமித் ஷாவை காக்க வைத்த எடப்பாடி- ஓ.பி.எஸ்... ஜவ்வாய் இழுக்கும் தொகுதி பங்கீடு..!

By Thiraviaraj RMFirst Published Mar 1, 2021, 11:05 AM IST
Highlights

25 முதல் 30 தொகுதிகள் வரை அமித்ஷா கேட்டதை தொடர்ந்து இறுதியில் 25 முதல் 30 வரை அதிமுக கூட்டணியில் இடம்பெறும் பாஜகவுக்கு ஒடுக்கப்படும் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

நேற்று இரவு சென்னை நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்தது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்பு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என நள்ளிரவு பேச்சுவார்த்தை முடியும் வரை எதிர்பார்த்த நிலையில், இன்னும் இரண்டு தினத்தில் அறிவிக்கப்படும் என தகவலை மட்டும் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

 

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும், அடுத்த நாள் காலை, தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், உட்பட முக்கிய தலைவர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரையும் தனித்தனியே சந்தித்து பேசினார்கள். தொகுதி பங்கீடு குறித்து பேசுகையில் 15 தொகுதி வரை தருவதாக அதிமுக தெரிவித்துள்ளது. ஆனால், தொடர்ந்து பாஜக தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இதனை தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை அமித்ஷா தலைமையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவிட்டு இரவு அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்னையில் உள்ள நட்சதிர ஓட்டலுக்கு வந்தார். அங்கே ஏற்கனவே அதிமுக சார்பில் வந்த முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்

.

சுமார் இரவு 10 மணியளவில் தொடங்கிய எந்த பேச்சுவார்த்தையை விரைவில் முடித்துவிட்டு சில மணி நேரங்களில் அமித்ஷா தனி விமானத்தில் டெல்லி செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பேச்சுவார்த்தை தொடங்கிய சில நிமிடங்களில் அதிமுக தரப்பில் 15 தொகுதிவரை பாஜகவுக்கு ஒடுக்கப்படும் என தெரிவித்தனர். எந்தந்த தொகுதிகள் என்பதை உங்க கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்கிறோம் என தெரிவித்துள்ளனர் அதிமுக தரப்பினர்.

இதற்கு எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் சில வினாடிகள் அமைதியாக இருந்த அமித்ஷா, உடனடியாக பாதுகாவலரிடம் கூறி தனது உதவியாளரை அழைத்து பேச்சுவார்த்தை முடிவதற்கு தாமதம் ஆகலாம். அதனால் இன்று டெல்லி திரும்பும் பயணத்திட்டத்தை நாளைக்கு மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளார். இதன் பின்பு பேச தொடங்கிய அமிதாஷா 35 தொகுதிகள் கேட்டுள்ளார். அதற்கு அதிமுக தரப்பில் பாமகவுக்கு 23 தொகுதிகள் மட்டும் தான் கொடுத்துளோம். இன்னும் தேமுதிக மற்றும் சிறிய கட்சிகள் இருக்கிறது. நாங்கள் 170 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து உள்ளோம் என தங்கள் நிலைப்பாட்டை அதிமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே அமித் ஷா டெல்லி கிளம்பியுள்ளார்.

 

இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 20 முதல் 25 தொகுதிகள் வரை அதிமுக ஒதுக்க முன் வந்தனர். ஆனால், 25 முதல் 30 தொகுதிகள் வரை அமித்ஷா கேட்டதை தொடர்ந்து இறுதியில் 25 முதல் 30 வரை அதிமுக கூட்டணியில் இடம்பெறும் பாஜகவுக்கு ஒடுக்கப்படும் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த இரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!