இடிப்பது பாபர் மசூதி தீர்ப்பா..? 2ஜி வழக்கு உத்தரவா..? சிபிஐ மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு..!

By Thiraviaraj RMFirst Published Sep 30, 2020, 4:14 PM IST
Highlights

மொத்த மசூதியும் திட்டமிட்டே இடித்துத் தள்ளப்பட்டுள்ளது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நிரூபிக்க முடியாத‌து சி.பி.ஐ.யின் தோல்வி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மொத்த மசூதியும் திட்டமிட்டே இடித்துத் தள்ளப்பட்டுள்ளது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நிரூபிக்க முடியாத‌து சி.பி.ஐ.யின் தோல்வி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சதியை நிரூபிக்க முடியாத‌து, சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவு என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொழுகை நடத்தும் இடத்தை அழிக்கும் நோக்கத்துடன், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது என்று பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும், "பாபர் மசூதி இடிப்பு வழக்கினை - அதில் உள்ள குற்றச்சதியை நிரூபிக்க முடியாமல், சி.பி.ஐ. தோற்று இருப்பது, இந்திய நாடு பாதுகாத்திட வேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

மசூதி மட்டுமல்ல; எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்தையும் ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் அநியாயத்திலும் அநியாயமாகும்; அப்பட்டமான சட்ட விரோதச் செயலாகும். குற்றவழக்குகளில் - குறிப்பாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நன்மதிப்பைச் சீர்குலைத்த "பாபர் மசூதி" இடிப்பு வழக்கில் - நடுநிலையுடன், எச்சரிக்கையாகவும் நியாயமாகவும் செயல்பட்டிருக்க வேண்டிய சி.பி.ஐ., அப்படிச் செயல்பட ஏனோ தவறிவிட்டது வெட்கக் கேடானது.

அரசியல் சட்டத்திற்கு நெருக்கடியை உருவாக்கிய ஒரு முக்கிய வழக்கில், பொறுப்பில்லாமல் ஏனோதானோ மனப்பான்மையுடன், சி.பி.ஐ. செயல்பட்டு - குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழான தனது கடமைகளைத் துறந்திருப்பது, நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது அனைவருக்கும் ஆழ்ந்த கவலையைத் தருகிறது”என அவர் தெரிவித்துள்ளார்.

 

நவம்பர் மாதத்துக்குள் 2ஜி வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்குமாறு சிபிஐ மனுத்தாக்கல் செய்தது. அதனை எதிர்த்து கனிமொழி, ஆ.ராசா தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அக்டோபர் 5 முதல் 2ஜி வழக்கு விசாரணை தினசரி நடைபெறும் என தெரிவித்துள்ளது. இதுவும் சிபிஐ மீது மு.க.ஸ்டாலின் கோபம் கொள்ள ஒரு காரணமெனக் கூறப்படுகிறது. 

click me!