மகேந்திரனை அரவணைத்த மு.க.ஸ்டாலின்... கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றிக் கொடியை பறக்க விடுவாரா?

By Asianet TamilFirst Published Jul 8, 2021, 8:53 PM IST
Highlights

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரன், லேட்டாக வந்திருந்தாலும் லேட்டஸ்டாக கிடைத்திருக்கிறார் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசினார்.
 

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய அக்கட்சியின் துணைத்தலைவர் ஆர். மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது அவரை வரவேற்று ஸ்டாலின் பேசுகையில், “கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெறாமல் போனது வருத்தமளிக்கிறது. மகேந்திரன் முன்பே திமுகவுக்கு வந்திருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்கும். சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே மகேந்திரனை எதிர்ப்பார்த்தேன். ஆனாலும் லேட்டாக வந்திருந்தாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் உள்ளிட்டோர் கிடைத்துள்ளனர்” என்று ஸ்டாலின் பேசினார்.
ஆர்.மகேந்திரனுடன் 78 பேர் திமுகவில் இணைந்தனர். மேலும் திமுகவில் இணையும் தன்னுடைய ஆதரவாளர்கள் 11 ஆயிரம் பேர் கொண்ட பட்டியலையும் மு.க. ஸ்டாலினிடம் மகேந்திரன் வழங்கினார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மகேந்திரன் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். இத்தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். மகேந்திரன் பிரித்த வாக்கால் திமுக வேட்பாளர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல 2019 நாடாளுமன்றத்  தேர்தலில் கோவையில் மநீம சார்பில் போட்டியிட்டு சுமார் 1.50 லட்சம் வாக்குகளை மகேந்திரன் பெற்றார். அவர் பெற்ற வாக்குகளால் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்டம் கண்டது. திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி சுலபமானது. அந்த அளவுக்கு கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மகேந்திரன் செல்வாக்கு உள்ளவர். வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு மகேந்திரனை திமுக அரவணைத்துள்ளது.

click me!