11 ஆயிரம் பேருக்கு பக்கா ஸ்கெட்ச்... லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்த மகேந்திரன்... ஸ்டாலின் அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 8, 2021, 7:40 PM IST
Highlights

தேர்தலுக்கு முன்பாக இப்படியொரு சம்பவம் நடந்திருந்தால், கோவையில் திமுக மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கும்.

சட்டமன்ற தேர்தல் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியடைந்த பிறகு முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியை விட்டு விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து கமல் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி விலகிய மகேந்திரன் இன்று திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 78 மநீம நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்தார். 

இதில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா, கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட ஜெகதீஷ் மற்றும் 20 மாவட்ட செயலாளர்கள் அடங்குவர். அத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த 11 ஆயிரம் நிர்வாகிகளையும் திமுகவில் இணைப்பதற்கான பட்டியலையும் மு.க.ஸ்டாலினிடம் மகேந்திரன் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது. 

இதனைத் தொடர்ந்து மநீம நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது: தேர்தல் அறிவித்த போதே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போ கொஞ்சம் லேட்டாகிடுச்சி. சூப்பர் ஸ்டார் ஒரு படத்தில் சொல்லுவார் லேட்டா வந்தாலும், லேட்டஸ்டாக வந்திருக்கேன்னு. அதுபோல் மகேந்திரன் லேட்டானாலும் லேட்டஸ்டாக திமுகவில் வந்து இணைந்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக இப்படியொரு சம்பவம் நடந்திருந்தால், கோவையில் திமுக மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கும். ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு வெற்றி பெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. அப்போதே மகேந்திரன் திமுகவில் வந்து இணைந்திருந்தால் அந்த கவலை இல்லாமல் போய் இருக்கும் எனத் தெரிவித்தார். 

click me!