ஸ்டாலினின் ‘டாக்டர்’ பேச்சு... சட்டமன்றத்தை கலகலக்க வைத்த முதல்வர்... மிரண்டு போன அதிமுக...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 24, 2021, 7:25 PM IST
Highlights

ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு அவையினர் கலகலப்பாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 
 

16வது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அசத்தல் அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவர் அப்போது முதல்வராக இருந்த போது பேசியதற்கும் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சர் ஆற்றிய உரையில், ‘ஏப்ரல் 6 முதல் அதிகமாக பரவத் தொடங்கிவிட்டது 5000-த்தில் இருந்து 19 ஆயிரம் ஆக ஆனது பாதிப்பு எண்ணிக்கை எனவே, கொரோனாவை அ.தி.மு.க. அரசு கட்டுப்படுத்திவிட்டது என்ற வாதம் மிகமிகத் தவறானது. அவரை யாராவது கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடக் கூடாது என்று கையை கட்டி போட்டு வைத்திருந்தார்களா எனத் தெரியவில்லை. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' என்று ஒரு திரைப்படம் வந்தது.

அதைப்போல பிப்ரவரி 26 முதல் மே வரையிலான இரண்டு மாத ஆட்சியை அ.தி.மு.க மறந்து விட்டதா என்று நான் கேட்க விரும்புகிறேன். ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்ததும் அலட்சியமாக இருந்ததன் விளைவுதான் பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரம் எனக் கூடியது. இத்தகைய மோசமான சூழலைக் கட்டுப்படுத்தியதுதான் தி.மு.க. அரசின் மகத்தான சாதனை என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

 கொரோனா வந்தபோது அதுபற்றி எதுவும் தெரியவில்லை. மருத்துவர்களுக்கே தெரியவில்லை மருந்தும் இல்லை. தடுப்பூசியும் இல்லை என்று இப்போதிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார்கள் அவர்கள் அந்தக் குழப்பமான சூழலில்தான் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டச் சொன்னேன். 

"ஸ்டாலின் என்ன டாக்டரா?'' எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கோபப்படவில்லை. பலமுறை நான் சொன்னேன். என்று இப்போதிருக்கிற மாண்புமிகு கேட்டார்கள் நான் உள்ளபடியே என்னவென்றால் கொரோனாவுக்குப் பிறகு அனைத்து பொது மக்களும் டாக்டர் ஆகிவிட்டார்கள் என்பது தான். எல்லோருமே பாதி டாக்டராகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் நாம் யாருமே, யாரையுமே நீங்கள் டாக்டரா என்று கேட்க முடியாது அந்த அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.

எனவே எதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டச் சொன்னேன் என்றால் அனைத்துத் தரப்பினரது ஆலோசனையையும் கேட்கவேண்டும் என்பதற்காகத்தான். கழக ஆட்சி அமைந்ததும், அனைத்து சட்டமன்றக் கட்சிக் குழுவை உள்ளடக்கி ஒரு குழுவை நியமித்தோம். அதிமுக சார்பிலேகூட முன்னாள் அமைச்சர் - மருத்துவர் மாண்புமிகு விஜயபாஸ்கர் அவர்கள்கூட அதில் இடம் பெற்றிருக்கிறார் இந்தக் குழுவின் ஆலோசனைகளைப் பெற்றுதான் இன்றைய அரசு செயல்படுகிறது. எனவே, கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரது கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் தங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூலமாக அரசுக்கு நீங்கள் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்று இந்த நேரத்திலே நான் உரிமையோடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால், இது அரசியல் பிரச்சினை அல்ல கட்சிப் பிரச்சினையும் அல்ல ஆட்சியின் பிரச்சினையும் அல்ல மக்கள் பிரச்சினை மக்கள் நலன் சார்ந்திருக்கக்கூடிய பிரச்சினை எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, 'நான் தவறாகச் சொல்லவில்லை. அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும்' என்று சொன்னார்கள். அதற்காக அவருக்கு நான் மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அனைவரும் சேர்ந்து செயல்பட்டு அனைத்து தரப்பினரது ஆலோசனையையும் பெற்று கொரோனாவுக்கு முழுமையான முற்றுப்புள்ளியை இந்த அரசு வைக்கும் என்று நான் உறுதிபட இந்த அவையிலே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார். 
 

click me!