ஆட்சியில் இருந்தப்போ சொன்னதை செய்யாமல் சும்மா எங்கள குறை சொல்லாதீங்க? எடப்பாடியாரை எகிறி அடித்த துரைமுருகன்.!

By vinoth kumarFirst Published Jun 24, 2021, 7:11 PM IST
Highlights

காவிரி - கோதாவரி நதிநீர் இணைக்கப்படும் என நீங்கள் சொன்னதை கடந்த ஆட்சியில் செய்யாமல் விட்டு விட்டீர்கள்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்திற்குள் இருக்கும் ஆறுகளை இணைக்க அதிமுக அரசு தவறிவிட்ட நிலையில், மாநிலங்களுக்கு கிடையே இருக்கும் ஆறுகளை இணைக்க ஆலோசனை வழங்குவதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சியில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என  நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையின் 16வது கூட்டத் தொடர் ஜூன் 21ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கான பதிலுரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதற்கு பின் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி;- ஆளுநர் உரையில் தமிழகத்திற்கு நலன் பயக்கும் பல முக்கியத் திட்டங்கள் இடம்பெறவில்லை என கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்;- காவிரி - கோதாவரி நதிநீர் இணைக்கப்படும் என நீங்கள் சொன்னதை கடந்த ஆட்சியில் செய்யாமல் விட்டு விட்டீர்கள்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்திற்குள் இருக்கும் ஆறுகளை இணைக்க அதிமுக அரசு தவறிவிட்ட நிலையில், மாநிலங்களுக்கு கிடையே இருக்கும் ஆறுகளை இணைக்க ஆலோசனை வழங்குவதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் உறுதியாக காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

click me!