ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கும் ராகுல்...! தாறுமாறு வேதனையில் எடப்பாடி!!

By vinoth kumarFirst Published Oct 30, 2018, 4:51 PM IST
Highlights

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் சமீப காலமாக கெத்து எகிறி இருப்பதாக அ.தி.மு.க.வினுள்ளேயே புலம்பல். ’அம்மா ஆசியோடு நான் அமைத்திருக்கும் ஆட்சி’ என்று  கோயமுத்தூரில் அவர் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

* முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் சமீப காலமாக கெத்து எகிறி இருப்பதாக அ.தி.மு.க.வினுள்ளேயே புலம்பல். ’அம்மா ஆசியோடு நான் அமைத்திருக்கும் ஆட்சி’ என்று  கோயமுத்தூரில் அவர் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், பிரிந்து போன அ.தி.மு.க.வினரை மீண்டும் கட்சிக்குள் இணைப்பது உள்ளிட்ட ‘பேட்ச்’ ஒர்க்கில் சமீபகாலமாக எடப்பாடியார் அதீத ஆர்வம் காட்டி வருகிறாராம். தினகரன் தரப்புக்கு சென்ற ஆதரவாளர்களை வேண்டி விரும்பி அவர் அழைப்பது இந்த கோணத்தில்தான். இந்த நல்ல முயற்சி ஏன் நம் கட்சி முக்கியஸ்தர்களின் கண்ணில் படமாட்டேங்கிறது! என்னை தூற்றுவோர் ஏன் வாழ்த்த தயங்குறாங்க? என்று வேதனைப்படுகிறாராம். 

* இவ்வளவு நாட்களாக தூரப்பார்வையுடன் தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள், நகர நிர்வாகிகள் ஆகியோரின் குற்றங்களை மட்டுமே கண்டுபிடித்து களையெடுத்து தூர் வாரிக் கொண்டிருந்தார் ஸ்டாலின். ஆனால் அவரது கைக்கு அருகிலேயே இருக்கும் வி.வி.ஐ.பி.க்கள் சிலர் ஸ்டாலினின் அதிகார சூட்டை பயன்படுத்தி ஆட்டம் போடுவதாக ஸ்டாலினின் குடும்பத்தினரே கண்டுபிடித்து புகார் தந்துள்ளனர். விளைவு, முக்கிய புள்ளிகள் இரண்டு பேருக்கு கடந்த சில நாட்களாக ஆதாரத்துடன் பரேடு நடக்கிறதாம் அறிவாலயத்தில். 

* இருபது தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகிவிட்டது  தமிழகம். அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. மூன்றுமே வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்க தயாராகிவிட்டன. இந்நிலையில் இந்த 20 தொகுதிகளில் சிலவற்றை தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் அழுத்தமான கோரிக்கை வைக்கிறதாம் காங்கிரஸ். நாங்க ஜெயிச்சா உங்களுக்குதானே ஆதரவு தருவோம்? பின்ன என்ன, இருபது தொகுதியில தேர்தல்கள் பிரம்மாண்டமா நடக்கிறப்ப  தேசிய கட்சியான நாங்க சும்மா இருக்குறது அசிங்கமா இருக்குமே! என்று நியாயம் பேசுகிறாராம் திருநாவுக்கரசர். எல்லாம் ராகுலின் தூண்டுதல் என்கிறார்கள்.

click me!