எடப்பாடியும், தினகரனும் சத்தியமா ஜெயிக்கமாட்டாங்க! ஸ்டாலின் தான் முதல்வர்!! அடித்துக்கூறும் சசிகலா மருமகன்

Published : Oct 30, 2018, 04:01 PM ISTUpdated : Oct 30, 2018, 04:02 PM IST
எடப்பாடியும், தினகரனும் சத்தியமா ஜெயிக்கமாட்டாங்க! ஸ்டாலின் தான் முதல்வர்!! அடித்துக்கூறும் சசிகலா மருமகன்

சுருக்கம்

..திவாகரனின் மகன் ஜெயானந்த். சமீபத்தில் அவர் தட்டியிருக்கும் தடாலடி ஸ்டேட்மெண்டால் நொந்து வெந்து கிடக்கிறது தமிழக முதல்வர்கள் இருவரின் கூடாரமும். 

தி.மு.க.வில் அதிருப்தியாளரான அழகிரியின் வாரிசுகள் தெறிக்க விடுவதில் கில்லிகள். தயாநிதியும், அவரது அக்கா கயல்விழியும் இப்படித்தான். அதேபோல் அ.தி.மு.க.வில் அதிருப்தியாளர்களான சசி வகையறாவிலும் ஒரு இளரத்தம் இப்படித்தான். 

தங்கள் பரம்பரையையே வாழ வைக்கும் கட்சி என்று கூட பாராமல் அ.தி.மு.க.வை போட்டுப் பொளப்பதில் கில்லிதான் அந்த இளைஞர். அவர்?....திவாகரனின் மகன் ஜெயானந்த். சமீபத்தில் அவர் தட்டியிருக்கும் தடாலடி ஸ்டேட்மெண்டால் நொந்து வெந்து கிடக்கிறது தமிழக முதல்வர்கள் இருவரின் கூடாரமும். அப்படி என்ன சொல்லிவிட்டார் ஜெயானந்த்...“சில விஷயங்களை தெளிவா சொல்லிடுறேன் கேட்டுக்குங்க. 

18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு இப்படித்தான் வருமுன்னு எல்லாருக்குமே தெரியும். இவங்க மேல்முறையீடு போனாலுமே இதுதான் நிலைமை. நிச்சயமா சாதகமான தீர்ப்பு வராது, வரவே வராது. இதுக்குப் பதிலா இவங்க இடைத்தேர்தலை சந்திச்சுட்டுப் போயிடலாம். சரி, இடைத்தேர்தல்ல நின்னா ஏராளமான இடங்கள்ள அ.ம.மு.க. ஜெயிச்சுடுமா? அ.தி.மு.க.வும் ஜெயிச்சுடுமா?ன்னு கேட்டா நிச்சயம் நடக்காது. 

ஏன்னா அ.தி.மு.க.தான் இப்ப பல கட்சிகளா பிரிஞ்சு கிடக்குதே. ஒற்றுமையில்லாத நிலையில ஓட்டுகள் மட்டும் எப்படி விழும்? அத்தனை ஓட்டுக்களும் நிச்சயமா பிரியும். பிரியுறதெல்லாம் தி.மு.க.வை நோக்கித்தான் போகும். இந்த லட்சணத்துல ஆளும் அ.தி.மு.க. அணியினர் அடிக்கிற லூட்டிகளையும் மக்கள் கவனிச்சுட்டுதான் இருக்கிறாங்க. அதுல உருவாகுற லட்சக்கணக்கான வெறுப்பு ஓட்டுக்களும் தி.மு.க.வுக்குதான் போகும். ஆக மொத்தத்துல ஸ்டாலின் செம்ம லக்கி போங்க!” என்று தட்டி கிளப்பியிருக்கிறார். இவர்தான்டா மருமகன்!

PREV
click me!

Recommended Stories

இரண்டாவது முறையாக அப்பாவான சீமான்.! ரசிகர்கள் வாழ்த்து மழை.!
VS Babu: ஸ்டாலினையே தோற்கடித்தவருக்கு அமைச்சரவையில் இடமில்லை! வி.எஸ்.பாபுவை விஜய் மறந்தது ஏன்? பின்னணி!