மோடியின் பிம்பத்தை உடைத்து விட்டார் மு.க.ஸ்டாலின்... பிரபல பத்திரிக்கையாளர் பெருமிதம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 19, 2022, 1:54 PM IST
Highlights

இது மக்களுக்கு பெரிய தெளிவை ஏற்படுத்தும். சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் அல்லது டெல்லியுடன் சண்டை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கில்லை. 

குடியரசு தின விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி, பாரதியார், வேலுநாச்சியார், மருது பாண்டியர்கள் அடங்கிய அணி வகுப்பு பேரணிக்கு மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. 

இந்நிலையில், அந்த அணிவகுப்பு குடியரசு தினத்தன்று தமிழகத்தில் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஸ்யாம் கூறுகையில், ‘’சர்ச்சையின் நடுநாயகமாக விளங்கிய நமது அலங்கார ஊர்தியை காட்சிப்படுத்த ஸ்டாலின் முயற்சி செய்கிறார். இது மக்களுக்கு பெரிய தெளிவை ஏற்படுத்தும். சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் அல்லது டெல்லியுடன் சண்டை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கில்லை. 

சர்ச்சையின் உண்மையான பின்னணி என்ன? இத்தகைய சுதந்திர போராட்ட வீரர்களை டெல்லி புறக்கணித்து இருக்கிறது? வஉசியின் 150 வது பிறந்தநாளை தமிழகம் எப்படி கொண்டாடியது? யார் மருதுபாண்டியர்கள்? என இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களைப் பற்றிய உணர்வுகளை தமிழகத்தில் ஊட்ட விரும்புகிறோம். அந்த சச்சரவால் நமக்கு வருத்தம், மன சங்கடம் எல்லாம் சரிதான். ஆனால் சர்ச்சையை தீர்க்க முடியாது. அலங்கார ஊர்திகள் இடம்பெறாது என மத்திய அரசு தெரிவித்து விட்ட நிலையில் ராஜ்நாத் சிங் கடிதம் அனுப்பிய பிறகு மு.க.ஸ்டாலினுக்கு வேறு வழியும் இல்லை. எனவே ஜனவரி 26-ஆம் தேதி நடக்கவிருக்கும் குடியரசு தின விழாவில் தமிழகத்தில் நடக்கவிருக்கிற நிகழ்ச்சியில் மத்திய அரசின் அங்கமாக இருக்கும் நமது ஆளுநர் தான் அந்த அணி வகுப்பை நடத்தி வைக்கிறார். 

அப்படி என்றால் எந்த ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததோ, அந்த ஊர்தியை மத்திய அரசின் பிரதிநிதியாக விளங்கக்கூடிய நமது ஆளுநர் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது. மத்திய அரசுக்கு இது ஒரு பாடம். அது தனியாக இருக்கட்டும். ஆனால் மாநில மக்கள் எதை புரிந்து கொள்வார்கள் என்றால் வஊசியை புறக்கணிக்கிறார்கள். பாரதியாரை புறக் கணிக்கிறார்கள், வேலுநாச்சியரை புறக்கணிக்கிறார்கள், மருது சகோதரர்களை புறக்கணிக்கிறார்கள் என்கிற கேள்வி மக்களிடையே எழும். மு.க.ஸ்டாலினின் இந்த முயற்சி மக்களிடையே கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக நான் பார்க்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!