தம்பி உன் முதுகிலும் கத்தி பாய்ச்சும் அந்த துரோக கூட்டம்! ஸ்டாலினுக்கு அழகிரி கண்ணீர் எச்சரிக்கை...

By sathish kFirst Published Sep 19, 2018, 12:07 PM IST
Highlights

ஸ்டாலினுக்கு இப்போது தமிழில் பிடிக்காத ஒரே எழுத்து ‘அ-னா’தான். ஆம் தெற்கு சீமையில் அழகிரியை அப்படித்தான் அழைப்பார்கள். அஞ்சாநெஞ்சரை பொறுத்தவரையில்  அம்புட்டு லேசாக பேட்டிக்கு உட்காரமாட்டார். உட்கார்ந்தால் தன் எதிரியை ஒரு உலுக்கு உலுக்காமல் எழமாட்டார். 

ஸ்டாலினுக்கு இப்போது தமிழில் பிடிக்காத ஒரே எழுத்து ‘அ-னா’தான். ஆம் தெற்கு சீமையில் அழகிரியை அப்படித்தான் அழைப்பார்கள். அஞ்சாநெஞ்சரை பொறுத்தவரையில்  அம்புட்டு லேசாக பேட்டிக்கு உட்காரமாட்டார். உட்கார்ந்தால் தன் எதிரியை ஒரு உலுக்கு உலுக்காமல் எழமாட்டார். 

அந்த வகையில் இப்போது ஸ்டாலினையும், அவரோடு இருப்பவர்களையும் வகுந்தெடுத்து பேசியிருக்கிறார். அதிலும் ‘உங்களால் பதவி பெற்றவர்கள் கூட இன்று உங்களுக்கு ஆறுதலாக, ஆதரவாக உங்கள் அருகில் இல்லையே?’ என்று கேட்டதற்கு, “துரோகத்துக்கு இரையாகுறது எனக்கொன்னும்  புதுசில்ல. எங்கப்பாவை விடவா நான் அதிகம் துரோகங்களை சந்திச்சுட்டேன்? எவ்வளவோ நல்லது செஞ்சும் கூட முதுகுல குத்திட்டுப் போன எத்தனையோ துரோகிகளை அவர் சர்வ சாதாரணமா கடந்து போயிருக்கிறார். 

ஆனால் ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிக்குறேன். என்னால் அரசியல் வாழ்க்கையும், பதவியும் பெற்றவங்க இன்னைக்கு என் வருத்த நேரத்தில் என்கூட இல்லை. தன்னோட பிழைப்புக்காக துரோகம் ஒன்றையே வழியாக தெரிஞ்சு வெச்சிருக்கிற பேர்வழிங்க அவங்க. இந்த ஜென்மங்கள் நாளைக்கு யார் முதுகுலேயும் துரோக கத்தியை பாய்ச்ச தயங்க மாட்டாங்க. 

நான் அதிகாரத்தில் இருந்தப்ப என் கூட நின்னு, தாங்கி பதவியை வாங்கினவங்க இன்னைக்கு வேற இடத்துக்குப் போயிட்டாங்க. ஸ்டாலின் இதை நினைச்சு பெருமைபடக்கூடாது. ‘அழகிரியின் ஆதரவாளர்கள் என் பக்கம்’ அப்படின்னு சந்தோஷப்படக்கூடாது. காரணம், சுற்றி நிற்பவர்கள் வீரர்கள் இல்லைங்க, துரோகிகள். இந்த துரோகிகள் நாளைக்கே தங்களோட சுயலாபத்துக்காக அவர் முதுகுலேயும் குத்துறதுக்கு கொஞ்சம் கூட தயங்கமாட்டாங்க. ஜாக்கிரதை! 

அறிவாலத்தில் சமீபத்தில் நடந்தது பொதுக்குழுவுமில்ல, செயற்குழுவுமில்லை. வெறும் ஸ்டாலின் புகழாரக்கூட்டம்தான். அதுல பேசுனவங்க தலைவரை பற்றி பேசுனதை விட ஸ்டாலினை துதிபாடுற வேலையைத்தானே அதிகம் பண்ணினாங்க. எதையாவது பேசி, எப்படியாவது பதவிகளை வாங்க துடிக்கிற கூட்டம் அப்படித்தான் பேசும். 

நாலஞ்சு பேர் பாராட்டிப் பேசுறதாலே அது உண்மையாகிடாது. நமக்கான தகுதி, திறமைங்கிறது நம்மோட உழைப்பால்தான் கிடைக்கணுமே தவிர, நாலு பேரை பேச வெச்சு அது மூலமா அங்கீகாரம் கிடைச்சுட்டதா கனவு காண கூடாது. அது அசிங்கம்.” என்று பொளந்திருக்கிறார்.  இதற்கு ஸ்டாலின் தரப்பிலிருந்து என்ன ரியாக்‌ஷன் வரப்போகிறதோ!?
 

click me!