டிசம்பர் 1-ல் மீண்டும் ஏற்படாது...! எல்லா ஏற்பாடுகளும் தயார்: அமைச்சர் உறுதி!

Published : Sep 19, 2018, 11:45 AM ISTUpdated : Sep 19, 2018, 11:49 AM IST
டிசம்பர் 1-ல் மீண்டும் ஏற்படாது...! எல்லா ஏற்பாடுகளும் தயார்: அமைச்சர் உறுதி!

சுருக்கம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றும், கடந்த கால அனுபவங்கள் வாயிலாக அவை எதிர்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றும், கடந்த கால அனுபவங்கள் வாயிலாக அவை எதிர்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். சென்னை, எழிலகத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார், செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திரா ஒடிசாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கூறினார். சென்னையில் ஏற்படும் கடல் அலை அளவு மற்றும் மழை அளவு இன்னும் பிறவற்றை ஐந்து நாட்கள் முன்பாக கணிக்கும். இதனால், பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்க உதவும் என்றார். 

வடகிழக்கு பருவமழை இந்த அமைப்பு மூலம் பரிசோதிக்க திட்டம் என்று கூறினார். இது தொடர்பான  புரிந்துணர்வு ஒப்பந்தம் 
செய்யப்பட்டது என்றார். மின்னணு மூலம் மனுக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்க வலைத்தள விண்ணப்பப் படிவம் உருவாக்கி நடவடிக்கைகளை குறுஞ்செய்தி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கடந்த கால அனுபவங்கள் வாயிலாக அவை எதிர்கொள்ளப்படும் என்றார். 

32 வருவாய் மாவங்களில் உள்ள கடலோர மாவட்டங்களை 13-லும் நேரடியாகவும் வீடியோ கான்பரசிங் மூலமாகவும் ஆய்வு நடத்தப்படும்.  வடகிழக்கு பருவமழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து  நீர் நிலைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்றார். கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டால், மீனவர்கள் செல்லக் கூடாது என்றும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..