மளிகை பொருட்களுடன் சோப்பு, கிருமி நாசினி, முகக்கவசம் கொடுங்கள்..!! தமிழக அரசுக்கு நாகை எம்எம்ஏ கோரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 11, 2020, 3:46 PM IST
Highlights

அது போல் 19 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை 500 ரூபாய்க்கு வழங்கும் தமிழக அரசின் திட்டம் வரவேற்புக்குரியது. அத்துடன் கிரிமிநாசினி, சோப்பு, கையுறை ,முகக் கவசம் ஆகியவற்றையும் தமிழக அரசு வீடு தோறும் இலவசமாக வழங்க  வேண்டும்

கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரையில்  859 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,  8 பேர் உயிரிழந்துள்ளனர் 44 பேர் வைரஸ் காய்ச்சலில் இருந்து குணம் அடைந்துள்ளனர் ,  இந்நிலையில் இது சமூக பரவலாக மாறுவதை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டிக் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது,  முன்னதாக இது தொடர்பாக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார், இந்நிலையில்  பாரதப் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மாநில முதல்வர்களிடம்  ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது தொடர்பாக கருத்து கேட்டறிந்துள்ளார் , இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கும் பட்சத்தில்  மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டுமென பாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்துள்ளார்,   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் :-

கொரணா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்.ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வரும் நிலையில், இக்கால கட்டத்தில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் அரசு உரிய கவனம் செலுத்தும்  என எதிர்பார்க்கிறோம். முக்கியமாக பல இடங்களில் சிக்கி தவிப்பவர்கள் தமிழகத்திற்குள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல , 48 மணி நேரம் போக்குவரத்து தளர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். இது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் கொரொனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனையில் இருப்பவர்கள், அது இல்லை (நெகட்டிவ்) என தெரிய வந்ததும், அவர்கள் விரைந்தது வீடு திரும்பி, உரிய பின் தொடர் கிசிச்சைகளை வீடுகளிலேயே தனிமையில் தங்கி  மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். 

அது போல் 19 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை 500 ரூபாய்க்கு வழங்கும் தமிழக அரசின் திட்டம் வரவேற்புக்குரியது. அத்துடன் கிரிமிநாசினி, சோப்பு, கையுறை ,முகக் கவசம் ஆகியவற்றையும் தமிழக அரசு வீடு தோறும் இலவசமாக வழங்க  வேண்டும் என்றும், இரண்டாம் கட்ட நிவாரணமாக ஒரு ரேஷன் அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்தும் தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். அது போல் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மீது நடத்தப்படும் வீட்டு வன்முறைகளை தடுக்கும் வகையில் உரிய கவுன்சிலிங் நடத்தவும், அது குறித்த புகார்கள் மீது உரிய துரித நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு கவனம் செலுத்த வேண்டும். அது போல், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தேவையான நிதியுதவிகளை தாராளமாக  செய்திட முன் வரவேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  

 

 

click me!