பாஜக ஐயோ பரிதாபம்..! மிசோரமில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்!

By vinoth kumarFirst Published Dec 11, 2018, 10:18 AM IST
Highlights

மிசோரம் சட்டப்பேரவை தொகுதிகளில் மிசோ தேசிய முன்னணி 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதியில் முன்னணியிலும், பாஜக ஒரு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

மிசோரம் சட்டப்பேரவை தொகுதிகளில் மிசோ தேசிய முன்னணி 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதியில் முன்னணியிலும், பாஜக ஒரு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 6ம் தேதி அறிவித்தது. சட்டீஸ்கர் மாநிலத்துக்கு கடந்த 12, 20ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் 28ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் தெலங்கானாவில் கடந்த 7ம் தேதி தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. இதன் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. 

கருத்துக் கணிப்புகளின் கணக்குகள் ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது தெரிய வந்துள்ள 33 தொகுதிகளில் மிசோ தேசிய முன்னணி 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதியில் முன்னணியில் உள்ளது. பாஜக ஒரு இடங்களிலும் முன்னிலை வகித்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

 வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமான மிசோரம் இருந்தது வந்தது. கடந்த தேர்தலில் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டமன்றத்தில், காங்கிரஸ் 34, தேசிய ஜனநாயகக் கூட்டணி 5, மிசோரம் மக்கள் மாநாட்டுக் கட்சி 1 இடங்களை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

click me!