மிசா விவாதம் முட்டாள்தனமானது... அதிமுகவிற்கு மாசாக பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Nov 17, 2019, 12:21 PM IST
Highlights

நான் மிசா சட்டத்தில் சிறையில் இருந்தேனா, இல்லையா என்பது மிக முக்கியமான விவாதமா? ஸ்டாலின் திமுகவை சேர்ந்தவரா என கேட்பது எப்படி முட்டாள்தனமானதோ, அதே போன்ற முட்டாள்தனமானதுதான் மிசா விவாதமும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நான் மிசா சட்டத்தில் சிறையில் இருந்தேனா, இல்லையா என்பது மிக முக்கியமான விவாதமா? ஸ்டாலின் திமுகவை சேர்ந்தவரா என கேட்பது எப்படி முட்டாள்தனமானதோ, அதே போன்ற முட்டாள்தனமானதுதான் மிசா விவாதமும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலத்தில் திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம் என்ற முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று நூலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் விழாவில் பேசிய அவர் நான் மிசா சட்டத்தில் சிறையில் இருந்தேனா, இல்லையா என்பது மிக முக்கியமான விவாதமா? ஸ்டாலின் தி.மு.க.வை சேர்ந்தவரா என கேட்பது எப்படி முட்டாள்தனமானதோ, அதே போன்ற முட்டாள்தனமானதுதான் மிசா விவாதமும்.

மிசா சட்டத்தில் நான் மட்டுமா சிறையில் இருந்தேன்? திமுக தலைவர்கள் பலரும் பல்வேறு சிறைகளில் இருந்தனர். மிசாவில் நான் சிறையில் இருந்தது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல பொய்யான சர்ச்சைகள் பரப்பப்பட்டு வருகிறது. நெருக்கடி நிலையை எதிர்த்த ஒரே கட்சி திமுக தான். ஆட்சி கலைந்தாலும் நெருக்கடி நிலையை ஆதரிக்க மாட்டேன் என கருணாநிதி கூறியவர்.

திமுக குடும்ப அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். குடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் திமுக. மேலும், திமுகவில் உள்ளவர்கள் கழகத்திற்காக குடும்பம் குடும்பமாக உழைத்தார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

click me!