'சவால்களை கடந்து முன்னேறிய பெண்ணாக பேசுகிறேன்'..! மேதகு ஆளுநர் தமிழிசை உருக்கம்..!

Published : Nov 17, 2019, 11:27 AM ISTUpdated : Nov 17, 2019, 11:30 AM IST
'சவால்களை கடந்து முன்னேறிய பெண்ணாக பேசுகிறேன்'..! மேதகு ஆளுநர் தமிழிசை உருக்கம்..!

சுருக்கம்

தற்கொலை என்பதை மாணவர்கள் தீர்வாக நினைக்க கூடாது என்று மதுரையில் ஆளுநர் தமிழிசை பேசினார்.  

தெலுங்கானா ஆளுநராக கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜன் செயல்பட்டுவருகிறார். மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார்.

மருத்துவ துறையில் சாதனை புரிந்தவர்களுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் செயல்முறைகளுக்கும் விருது வழங்கி தமிழிசை சவுந்தர்ராஜன் உரையாற்றினார். அப்போது அவர் எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் தற்கொலை என்பதை தீர்வாக எடுத்துக்கொள்ள கூடாது என்று அறிவுரை வழங்கினார். மாணவர்கள் பாடங்களை அன்றே படிக்கச் கூடாது என்றும் தேர்வுக்கு முந்தைய நாளில் படிப்பது நன்மை கிடையாது எனவும் பேசினார்.

பள்ளிக்கோ, கல்லூரிக்கோ பிள்ளைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை தான் பார்த்திருப்பதாக கூறிய தமிழிசை சவுந்தரராஜன், அவர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர சவால்களுக்கு பயந்து மாணவர்கள் தற்கொலை செய்ய கூடாது என்றார். மேலும் சவால்களை கடந்து வாழ்வில் முன்னேறிய பெண் என்பதால் இவற்றை கூறுவதாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு.. ஆளுநர் உங்களுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கணுமா..? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
30 சீட்டு: ரூ.300 கோடி..மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி..! பிரேமலதா டிமாண்ட்.. வாயடைத்துப்போன பாஜக..!