அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்துக் கோவில்... திருமாவளவனின் தெனாவட்டு பேச்சு... கொதித்தெழும் இந்துக்கள்..!

By vinoth kumarFirst Published Nov 17, 2019, 11:41 AM IST
Highlights

இந்து கோவில் கோபுரங்களில் அசிங்கமான பொம்மைகள் இருப்பதாக தொல்.திருமாவளவன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் இந்து முன்னணியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்து கோவில் கோபுரங்களில் அசிங்கமான பொம்மைகள் இருப்பதாக தொல்.திருமாவளவன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் இந்து முன்னணியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. 

ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவு செய்து இருந்தார். 

இந்நிலையில், இந்து முன்னணி ஆர்.கே.நகர் தொகுதி துணை தலைவர் மணிகண்டன், செயலாளர் அஜித் ஆகியோர் தலைமையில் கட்சியினர் ஆர்.கே.நகர் மற்றும் கொருக்குப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் புகார் மனு கொடுத்தனர். அதில், ‘‘புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடந்த விசிக கூட்டத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது, இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி பேசியுள்ளார். இந்து மத உணர்வுகளையும் நம்பிக்கையையும் அவமதித்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இந்து முன்னணியின் புகார் மனு அளித்துள்ளனர். 

click me!