
சசிகலாவின் பரோல் முடிந்து இன்று மீண்டும் சிறைக்கு செல்ல உள்ள நிலையில், தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
7-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலா பரோல் முடிந்து இன்று பிற்பகல் சென்னையிலிருந்து கிளம்ப உள்ள நிலையில், தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
சசிகலா சென்னையிலிருந்து கிளம்பும்போது சில அமைச்சர்கள் அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக முதல்வருக்கு உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. அதனடிப்படையில் அந்த சந்திப்பை தடுப்பதற்காக முதல்வர் இன்று அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
எது எப்படியோ? தமிழ்நாட்டில் மக்கள் சந்தித்துவரும் பிரச்னைகள் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்தால் சரிதான்...