ஆர்.கே.நகரில் தோற்றால் ரெய்டு நிச்சயம்! ஆப்பு சீவும் அமித்ஷா... அலறும் அமைச்சர்கள் ‘பதுக்கலில்’ செம்ம பிஸி...

 
Published : Nov 26, 2017, 04:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
ஆர்.கே.நகரில் தோற்றால் ரெய்டு நிச்சயம்! ஆப்பு சீவும் அமித்ஷா... அலறும் அமைச்சர்கள் ‘பதுக்கலில்’ செம்ம பிஸி...

சுருக்கம்

Ministers Suffered Raid is sure to fail in RK Nagar By Election

இரட்டை இலை சின்னம் எடப்பாடி - பன்னீர் அணிக்கு ஒதுக்கப்பட காரணமே பி.ஜே.பி.தான்! என்று ஒரு விமர்சனம் வலுவாக இருக்கிறது. 

இந்நிலையில் இவர்களுக்கு இதை ஒதுக்கி கொடுப்பதால் பி.ஜே.பி.க்கு கிடைக்கும் லாபம் என்ன? என்பது ஒரு கேள்வி கொக்கியாகவே இருக்கிறது. இந்நிலையில் , இரட்டை இலையை இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தரப்புக்கு தர இரண்டு நிபந்தனைகளை பி.ஜே.பி. விதித்திருப்பதாக சொல்கிறார்கள். 
அவை இவைதான் என்கிறார்கள்...

ஒன்று, எடப்பாடி மற்றும் பன்னீர் இணைந்த அரசு மீது தமிழக மக்கள் கடும் வெறுப்பில் இருக்கிறார்கள் என்று மோடி மற்றும் அமித்ஷாவுக்கு மத்திய ஒரு உளவுத்துறை ஒரு நோட் அனுப்பியிருக்கிறது. இதனால் அ.தி.மு.க.வுடனான தங்கள் நெருக்கத்தை சற்றே தளர்த்தியிருக்கிறது பி.ஜே.பி. அதன் வெளிப்பாடுதான் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து தங்களை நடுநிலையாளனாக நிலை நிறுத்திக் கொள்ள முயற்சித்த கதை. 

இந்நிலையில் இரட்டை இலையை ஆளும் அணிக்கு கொடுத்து ஆர்.கே.நகர் தேர்தலை அவர்களை சந்திக்க வைக்கிறதாம் பி.ஜே.பி. ஒருவேளை இந்த தேர்தலில் அதிகளவு பண வழங்கல் தில்லாலங்கடிகள் இல்லாமல் மிக கணிசமான வாக்குகளை  எடப்பாடி - பன்னீர் பெற்றார்களேயானால் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் தாங்கள் சொல்லுமளவுக்கு சீட்டுகளை ஒதுக்கு  கூட்டணி வைக்க வேண்டும் என்று பி.ஜே.பி. நிர்பந்தித்து உள்ளதாம். 

இரண்டு, 2019ல் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தாங்கள் விரும்பும் சீட்டுகளை ஒதுக்கிட வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை. 

ஒரு வேளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. அணி மோசமான வாக்குகளை பெற்றால் அவர்களுடன் கூட்டணியே கிடையாது எனும் முடிவுக்கு பி.ஜே.பி. வந்துவிட்டு அடுத்த குதிரையை சவாரிக்கு தேடுமாம். 

ஆக மொத்தத்தில் தமிழகத்தில் அரசு அதிகார ரீதியில்  காலூன்ற தாங்கள் எடுக்கும் முயற்சியில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒரு உறைகல்லாக வைத்திருக்கும் பி.ஜே.பி., இலையை வழங்கியதும் ஒரு சோதனை ரீதியில்தான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். 

இலை கிடைத்ததற்கு ஹேப்பி! ஹேப்பி! என்று வெளியே கூவிக் கொண்டாலும் கூட வாயில் ஸ்வீட்டை வைத்துவிட்டு, அடியில் வேட்டை வைத்திருக்கும் பி.ஜே.பி.யின் திட்டம் புரிந்திருப்பதால் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள் அமைச்சர்கள். தொண்டர்கள் மற்றும் மக்களின் கடுப்பினால் தாங்கள் தோல்வியையோ அல்லது அதற்கு ஈடான குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியையோ பெற்றால் பி.ஜே.பி. தங்கள் மீது பல வகையான நெருக்கடி கத்திகளை இறக்கிடுமே என்பதே அவர்களின் பயம். 

குறிப்பாக தங்களை கை கழுவுவது என்று முடிவு கட்டிவிட்டால், பி.ஜே.பி. முதலில் செலுத்தும் ஆயுதம் ‘ரெய்டு’தான். அப்படியொன்று நடந்தால் சசி டீம் போல் இத்தனை காலம் மாய்ந்து மாய்ந்து சேர்த்து வைத்ததெல்லாம் கூவிக்கிட்டு போயிடுமே என்று நடுங்குகிறார்கள். அதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிக வாக்கில் வின் பண்ணும் வழியை தேடும் அதே வேளையில் இதுவரையில் சேர்த்த சொத்துக்களை கண்ணுக்கு புலம்ப்படாமல் மறைக்கும் காரியத்திலும் பிஸியாக இருக்கிறார்களாம். 
என்னா வில்லத்தனம்!

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!