கொரோனாவை உடனடியாக கட்டுப்படுத்தணும்..! 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமித்த ஸ்டாலின்

By karthikeyan VFirst Published May 9, 2021, 9:13 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 14 மாவட்டங்களில் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
 

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று ஒரே நாளில் சுமார் 29 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

கொரோனாவை கட்டுப்படுத்தவும், கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சையளிப்பதை உறுதி செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில், கொரோனாவை கட்டுப்படுத்த நாளை முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

ஊரடங்கை நடைமுறைப்படுத்த, நோய்தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள 14 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக அமைச்சர்களை நியமித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன்படி, சென்னை, கோவை, மதுரை, துாத்துக்குடி, திருச்சி மாவட்டங்களுக்கு தலா 2 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டம் - மா.சுப்பிரமணியம்,சேகர்பாபு
செங்கல்பட்டு -  தா.மோ. அன்பரசன்
கோவை - சக்ரபாணி,ராமச்சந்திரன்
திருவள்ளூர் - சா.மு. நாசர்
மதுரை - மூர்த்தி,பழனிவேல் தியாகராஜன்
துாத்துக்குடி - கீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன்
சேலம் - செந்தில்பாலாஜி
திருச்சி - கே.என்.நேரு , அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருநெல்வேலி - ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு
ஈரோடு - முத்துசாமி
காஞ்சிபுரம் - எ.வ.வேலு
திருப்பூர் - சாமிநாதன்
வேலுார் - துரைமுருகன், காந்தி
விழுப்புரம் - பொன்முடி, செஞ்சி. மஸ்தான்
 

click me!