ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்... அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிர்ச்சி..!

Published : May 09, 2021, 05:26 PM IST
ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்... அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிர்ச்சி..!

சுருக்கம்

கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கீதா மணிவண்ணன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கீதா மணிவண்ணன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில்  2016ம் ஆண்டு முதல் 2021 வரைஅதிமுக எம்எல்ஏவாக இருந்தவர்  கீதா மணிவண்ணன். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்து வந்த அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பேன் என கூறினார். 

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் சென்னை சென்று அங்கு அண்ணா அறிவாலயத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில்  மு.க.ஸ்டாலினிடம் பூங்கொத்து கொடுத்து திமுகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ திடீரென திமுகவில் இணைந்த சம்பவம் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து, கீதா மணிவண்ணன் கூறுகையில்;- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தற்போது அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு இரண்டு கோஷ்டிகளுக்கிடையே தீவிர போட்டி நிலவி வருகிறது. அவர்களுக்குள் ஒருங்கிணைந்த தலைமை இல்லை. அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் முதல்வராக பதவியேற்றுள்ளதால் தமிழகத்திற்கு நல்லாட்சி ஆரம்பமாகியுள்ளது. இதனால், திமுகவில் இணைந்துள்ளேன் என்றார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?