எல்.முருகனை வீழ்த்திய திமுக வேட்பாளருக்கு அமைச்சர் பதவி.. மாஸ் காட்டும் மு.க.ஸ்டாலின்..!

Published : May 06, 2021, 07:30 PM IST
எல்.முருகனை வீழ்த்திய  திமுக வேட்பாளருக்கு அமைச்சர் பதவி.. மாஸ் காட்டும் மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை தோற்கடித்த கயல்விழி செல்வராஜூக்கு அமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். 

தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை தோற்கடித்த கயல்விழி செல்வராஜூக்கு அமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுகவுக்கு மட்டும் 125 இடங்கள் கிடைத்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் உள்ளனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எளிமையான முறையில் நாளை தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட உள்ளார். அவருடன் 34 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர்.

இந்நிலையில், புதிய திமுக அரசின் அமைச்சரவை பட்டியல் இன்று மாலை வெளியானது. அதில் துரைமுருகனுக்கு நீர்பாசனத்துறையும், கே.என்.நேருவுக்கு நகர்ப்புற வளர்ச்சி துறையும், ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறையும், எ.வ.வேலுக்கு பொதுப்பணித்துறையும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2006ல் இருந்து 2011ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த 14 பேர்  மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இதில், கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோருக்கு புதியதாக வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை தாராபுரம் தொகுதியில் வீழ்த்திய என்.கயல்விழி செல்வராஜூக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  அவர் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் எல்.முருகனை 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதற்காக கயல்விழி செல்வராஜூக்கு அமைச்சர் பதவி பரிசாக மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!