உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாகவும் 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாகவும் 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுக பைல்ஸ் என்கிற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உட்பட திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதை அடுத்து உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், சமூக ஊடக பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவினை நீக்க வேண்டும்.
இதையும் படிங்க: அரசியல் நோக்கத்துக்காகவே மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு-சட்டசபையில் வெளிநடப்பு செய்த பாஜக ஆவேசம்
இழப்பீடு தொகையாக ரூ.500 கோடி வழங்க வேண்டும் என்று தெரிவித்ததோடு இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்திற்குள் இவற்றை செய்ய தவறினால் அண்ணாமலைக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என திமுக அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: கையை கட்டி குனிஞ்சு பேசனுமா? பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவளவன் ஆவேசம்
இதுக்குறித்து அமைச்சர் உதயநிதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அனுப்பியுள்ள நோட்டீஸில், உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளீர்கள். அதற்காக இந்த நோட்டீஸ் பெற்ற 48 மணி நேரத்தில் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்க தவறினால் அண்ணாமலை ரூ. 50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார்.