எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். 7.5% இட ஒதுக்கீட்டில், மருத்துவ படிப்பில் சேருவதற்கு 2695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணிய வெளியிட்டார். 7.5% இட ஒதுக்கீட்டில், மருத்துவ படிப்பில் சேருவதற்கு 2695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. கடந்த 3-ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி 40,264 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 36,100 பேர் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,457 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
இதையும் படிங்க;- ரூ.1 லட்சம் மாத சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு.. விண்ணப்ப பதிவு தொடங்கியது..
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதனையடுத்து செய்ததியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- 848 தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் போக மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான 7,377 இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்காக 2695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 454 எம்பிபிஎஸ், 104 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- இபிஸ்க்கு பக்கத்து சீட் ஓபிஎஸ்..! அதிர்ச்சியில் எடப்பாடி அணி..! சட்டசபை கூட்டத்தை புறக்கணிக்க திட்டம்.?