இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வராத ரயில் பாதையில் தலையை வைத்து படுத்தவரின் வாரிசு தானே ஸ்டாலின்- அண்ணாமலை

By Ajmal KhanFirst Published Oct 17, 2022, 9:06 AM IST
Highlights

எப்போதெல்லாம் திமுக சரிவை நோக்கி பயணிக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் 'ஹிந்தி எதிர்ப்பு'. 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததற்கு அடித்தளமாக இருந்தது ஹிந்தி எதிர்ப்பு தான் என்பதனாலோ ஏனோ இன்று வரை தேவையற்ற நேரங்களிலும் ஹிந்தி எதிர்ப்பு என்ற கூக்குரல் திமுக கூடாரத்திலிருந்து ஒலித்து கொண்டே இருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம்

இனியும் பிரிவினைவாத சிந்தனைகளை தூண்டிவிடாமல், மக்களை வஞ்சிக்காமல் திமுகவினர் செயல்பட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று தினந்தோறும் மக்களின் பெரும் துயராக இருப்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள். மக்களை அன்றாடம் கொச்சைப்படுத்தி, வேதனை படுத்தாவிட்டால் உறக்கம் வராது திமுகவினருக்கு இதனால் முதல்வருக்கு தூக்கம் கெட்டு விட்டது என்று அவரே ஒப்புக் கொள்ளும் போது நாம் என்ன சொல்வது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விளம்பரத்திற்காக மட்டுமே செயல்பட்டு வரும் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்.40 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்று கேட்ட ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மேல் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஒப்புதலோடு நடக்கும் வளங்களை சுரண்டும் நடவடிக்கையால் 3 மாதங்களுக்கு ஒருமுறை நமது மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த விஷயத்தை பத்தி பேசவே இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய பரபரப்பு தகவல்..!

எப்போதெல்லாம் திமுக சரிவை நோக்கி பயணிக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் 'ஹிந்தி எதிர்ப்பு'. 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததற்கு அடித்தளமாக இருந்தது ஹிந்தி எதிர்ப்பு தான் என்பதனாலோ ஏனோ இன்று வரை தேவையற்ற நேரங்களிலும் ஹிந்தி எதிர்ப்பு என்ற கூக்குரல் திமுக கூடாரத்திலிருந்து ஒலித்து கொண்டே இருக்கிறது. 1938ஆம் ஆண்டு ஹிந்தி மொழியை கட்டாயமாக்கிய ராஜாஜி அவர்களை எதிர்த்து குரல் எழுப்பியது ஈழத்து சிவானந்த அடிகளார். இன்று வரை அந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியது பெரியார் தான் என்று திமுக பரப்பி வருகிறது. ஆனால் 1965ஆம் ஆண்டு திமுக தேர்தலுக்கு முன்னெடுப்பாக மீண்டும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டத்தை பற்றி பெரியார் என்ன சொன்னார் என்று தமிழக முதல்வர் 'சொல்லாவிட்டால் என்ன, நாம் சொல்லுவோம்."இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடந்த காலித்தனம்... ஆரம்பத்திலே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த நாசவேலைகளும் இத்தனை உயிர்சேதமும் உடமை சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்" என்று பேசியுள்ளார் பெரியார்
இந்தி எதிர்ப்பு அன்றும் - இன்றும் (பதிப்புரை)

பாஜக தலையீடு தவறானது.. பாஜகவை பொளந்து கட்டிய கே.பி முனுசாமி! அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு

 "எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல. ஆங்கிலம் பொதுமொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ் நாட்டு மொழியாக, தமிழன் வீட்டுமொழியாக ஆகவேண்டும் என்பதற்காகவே ஆகும்" - இதை சொன்னதும் பெரியார் தான்.(விடுதலை, 27.01.1969) தமிழ் மொழி உரிமைக்காக போராடி உயிர்நீத்த தாளமுத்து, நடராசன் மற்றும் டாக்டர் தருமாம்பாள் அவர்களின் குடும்பத்தார் இன்று திமுகவின் தலைவராக உள்ளார்களா? குறைந்தபட்சம் முக்கிய பொறுப்புகளிலாவது உள்ளார்களா? அவர்களுக்கு அமைக்கப்பட்ட சமாதி கேட்பாரற்று பராமரிப்பின்றி இருக்கிறதே? ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வராத ரயில் பாதையில் தலையை வைத்து படுத்துக் கொண்டு போராடியவர்களில் வழித்தோன்றலான திமுக தலைவரும் தமிழக முதல்வருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இதற்கு பதில் அளிப்பாரா? 

2020ஆம் ஆண்டு தமிழில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களில் எண்ணிக்கை 4,23,278. AICTE வழங்கிய புள்ளிவிவரங்களின் படி 2021-22 கல்வி ஆண்டில் தமிழில் பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் எண்ணிக்கை வெறும் 50. தமிழகத்தில் சுமார் 1.9 லட்ச பொறியியல் பட்டப்படிப்பு இடங்களில் வெறும் 1377 இடங்கள் மட்டுமே தமிழ் வழி கல்வியாகும். ஆட்சி மொழி குழு வழங்கிய பரிந்துரையில் தமிழ் மொழி உட்பட அனைத்து பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை முதல்வர் தனது அறிக்கையில் தவிர்த்தது ஏன்?தமிழுக்காக முன்னெடுக்கப்பட்ட முதல் போராட்டம் நடந்து 80 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் தமிழ் வளர்ந்துள்ளதா, தமிழகத்தில் தமிழ் மொழி காக்க பட்டுள்ளதா என்பதை திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இனியும் பிரிவினைவாத சிந்தனைகளை தூண்டிவிடாமல், மக்களை வஞ்சிக்காமல், அரசியல் லாபத்திற்காக பொய் கதைகளை கட்டவிழ்த்துவிடாமல் திமுகவினர் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

இபிஸ்க்கு பக்கத்து சீட் ஓபிஎஸ்..! அதிர்ச்சியில் எடப்பாடி அணி..! சட்டசபை கூட்டத்தை புறக்கணிக்க திட்டம்.?

 

click me!