அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை எவ்வளவு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன அதிர்ச்சி தகவல்!!

By Narendran S  |  First Published Apr 14, 2023, 10:25 PM IST

அண்ணாமலை மீது வழக்கு தொடர இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 


அண்ணாமலை மீது வழக்கு தொடர இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சொத்து பட்டியல் குறித்து திமுக தலைமையில் இருந்து உரிய விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணாமலை காட்டியதை மனசாட்சி இருக்கும் யாருமே பில்லாக ஏற்று கொள்ள மாட்டார்கள். பில் என காகிதத்தை வெளியிட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்க வேண்டும். இந்த எக்ஸ் எல் சீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது? எனக்கு எதுவுமே கிடையாது எல்லாமே எனது நண்பர்கள் கொடுக்கின்றனர் என அண்ணாமலை தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க: அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன்? டிடிவி தினகரன் கேள்வி!!

Tap to resize

Latest Videos

அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.75 லட்சம். மாத மாதம் இதை யார்  கொடுக்கின்றார்? ஒருமாதம் உதவி செய்யலாம், வருடம் முழுக்க யார் உதவி செய்வார்? ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பணம் அனைத்தும் வெளியில் இருந்து வருகிறது என்றால், பணம் எங்கே வார் ரூம்மில் இருந்து வருகின்றதா? வார் ரூமில் செய்யப்படும் வசூல்தான் அவரது நண்பரா? யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.

இதையும் படிங்க: லஞ்சம் இப்போ அன்பளிப்பா ஆகிடுச்சா? அரசியல் கோமாளி_அண்ணாமலை.. பங்கமாய் கலாய்த்த திமுக ஐடி விங்..!

அண்ணாமலை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் சொந்த நிதியில் இருந்து பணம் எதுவும் செலவு செய்யவில்லை என்று தெரிவித்து இருக்கும் போது, அவரக்குறிச்சி தேர்தலில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தது எப்படி என்று தெரிவிக்கவில்லை. அண்ணாமலை இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தியத்தற்கு பதிலாக வீடியோ ரெக்கார்டு  பண்ணி அனுப்பி இருக்கலாம், பத்திரிகையாளர்களுக்கு கேள்வி கேட்கவே வாய்ப்பு கொடுக்கவில்லை. தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து இன்று வெளியிட்டு இருக்கின்றார், என்னைபற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கின்றார், முதல்வர் அனுமதி பெற்று நானே நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கை தாக்கல் செய்ய இருக்கின்றேன். ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்யை சொல்கின்றார் என்று தெரிவித்துள்ளார். 

click me!