அடேங்கப்பா..! 100 நாள் வேலைத்திட்டம் 365 நாட்களாக உயர்த்தப்படுமாம்..! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..!

By ezhil mozhiFirst Published Apr 3, 2019, 4:24 PM IST
Highlights

100 நாள் வேலைத்திட்டம் 365 நாட்களாகஉயர்த்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

100 நாள் வேலைத்திட்டம் 365 நாட்களாகஉயர்த்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த தருணத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வெவ்வேறு புதுப்புது திட்டங்களை தேர்தல் அறிக்கையாக அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் மாநில அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் எழுந்த விமர்சனத்தை அடுத்து, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மிஞ்சும் வகையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் 100 நாள் வேலை திட்டம் 365 நாட்கள் ஆக உயர்த்தப்படும் என அதிரடியாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் விவசாய மக்களிடையே காங்கிரசை காட்டிலும் அதிமுக வெளியிட்டு வரும் இந்த அறிவிப்பு பெரும்  வரவேற்பை பெற்றுள்ளது.

100 நாள் வேலை திட்டம் 365 நாட்களாக உயர்த்த படுமேயானால் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் இதன் மூலம் நல்ல பலன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

click me!