அண்ணாமலை ஒரு அரைவேக்காடு... அமைச்சர் செந்தில்பாலாஜி கடும் தாக்கு!!

Published : Jun 15, 2022, 08:55 PM IST
அண்ணாமலை ஒரு அரைவேக்காடு... அமைச்சர் செந்தில்பாலாஜி கடும் தாக்கு!!

சுருக்கம்

தமிழக அரசு குறித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் அரைவேக்காட்டுத்தனமானது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சாடியுள்ளார். 

தமிழக அரசு குறித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் அரைவேக்காட்டுத்தனமானது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சாடியுள்ளார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மின் திட்டங்களின் நிலை குறித்தும், சீரான மின் விநியோகம் பற்றியும் சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் துறை தலைமை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த ஓராண்டில் மட்டும் 13 லட்சத்து 32 ஆயிரத்து 970 பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. 27 ஆயிரத்து 836 பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டு உள்ளது. சென்னையை பொருத்தவரை மின் நுகர்வு அதிகரித்துள்ளது. அடுத்த ஓராண்டில் 6 ஆயிரத்து 200 மெகா வாட் மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்கள் 180 டாலருக்கு ஒரு டன் நிலக்கரியை கொள்முதல் செய்து வரும் நிலையில், தமிழ்நாடு தான் நாட்டிலேயே குறைவாக 143 டாலருக்கு கொள்முதல் செய்துள்ளது. இதை அறிந்து கொள்ளாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக அரசை விமர்சித்து வருகிறார் என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!