சூப்பர் ஸ்டாரையே மிரளவிட்ட பாஜக.. ரஜினி மன்ற முக்கிய புள்ளியை ஸ்கெச் போட்டு தூக்கிய அண்ணாமலை..

Published : Jun 15, 2022, 06:26 PM IST
சூப்பர் ஸ்டாரையே மிரளவிட்ட பாஜக.. ரஜினி மன்ற முக்கிய புள்ளியை ஸ்கெச் போட்டு தூக்கிய அண்ணாமலை..

சுருக்கம்

நடிகர் ரஜினி ரசிகர் மன்றத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் ரஜினி கணேசன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நடிகர் ரஜினி ரசிகர் மன்றத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் ரஜினி கணேசன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு இதோ வரப்போகிறார், அதோ வரப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அரசியலுக்கு வருகிறேன், யுத்தத்துக்கு தயாராக இருங்கள் என ரசிகர்களை உசுப்பேத்தியே ரஜினிகாந்த் தேர்தலுக்கு நெருக்கத்தில் அரசியலை விட்டே ஒதுங்குவதாக அறிவித்தார். பல ஆண்டுகளாக இதோ வரப்போகிறார் அதோவரப்போகிறார் என காத்திருந்த ரசிகர்களுக்கு அவரின் அரசியல் புறக்கணிப்பு முடிவு பேரிடியாக விழுந்தது. அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என கூறி தனது திரைப்படத்தை ஓட வைத்துக் கொண்டார், முழுக்க முழுக்க சுயநலத்திற்காக தனது ரசிகர்களை அரசியலுக்கு வருகிறேன் என்று நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் என்ற விமர்சனம் அவர் மீது இருந்து வருகிறது.

இந்நிலையில் ரஜினி மீது அதிருப்தி அடைந்த அவரது நீண்ட நாளைய ரசிகர்கள் வேறு கட்சிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். மொத்தமாக அவர் மீது நம்பிக்கை இழந்த ரசிகர்கள் ரஜினி ரசிகர்கள் மன்றத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர். மறுபுறம் அவர்களை பாஜக தங்களது கட்சிக்கு இழுக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த வரிசையில் தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரஜினி கணேசன் மூலம் அந்த மாவட்டத்தில் உள்ள மொத்த ரஜினி ரசிகர்களையும் பாஜகவிற்கு இழுக்கும் வேலை தீவிரமாக நடந்து வருகிறது.  

அக்கட்சியில் முக்கிய பிரமுகர் கருப்பு முருகானந்தம் இதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் ரஜினி கணேசன் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்திலும் பல மாவட்டங்களில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை பாஜகவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி வருகிறது. இது உண்மையான ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில் பாஜகவுக்கு தனி வாக்கு வங்கி உருவாக்கும் முயற்சியில் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் அதிமுக, திமுகவில் உள்ள சில முக்கிய புள்ளிகள் மற்றும்  முக்கிய அரசியல் புள்ளிகளின் வாரிசுகளுக்கு  பாஜக வலைவிரித்து வருகிறது. அந்த வரிசையில் ரஜினி  ரசிகர் மன்றத்திற்கு தற்போது வலை விரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தஞ்சை மற்றும் அதை சுற்றியுள்ள சில மாவட்டங்களை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தினர் பாஜகவில் இணைந்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் மொத்த ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தையும் மெல்ல மெல்ல பாஜக பக்கம் இழுக்க அக்கட்சி பெரிய திட்டம் வைத்துள்ளதாகவும்,  நாளடைவில் ரஜினியின் தங்களுக்கு ஆதராவாக உள்ளார் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்க வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில்  தகவல் பகிர்ந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சூப்பர்ஸ்டாரின் சுறுசுறுப்பான ரசிகரான தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. ரா.ரஜினி கணேசன் அவர்களின் தலைமையில் ஓய்வு அறியாத நாட்டுக்கு உழைக்கும் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கரத்தை வலுப்படுத்த சுந்தர சோழ புரம் தஞ்சை மாநகரில் பிஜேபியில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆன்மீக அரசியல் பற்றுக்கொண்டு தேசியத்தை வலுப்படுத்த இணையம் வந்தவர்களை தமிழக பாஜக சார்பில் அன்புடன் வரவேற்கிறேன். என பதிவிட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!