கருப்பு எம்ஜிஆர் அண்ணாமலை அழைக்கிறார் என மதுரையில் பாஜகவினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கருப்பு எம்ஜிஆர் அண்ணாமலை அழைக்கிறார் என மதுரையில் பாஜகவினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தேர்தல் வந்துவிட்டாலே முன்னாள் முதல்வர், புரட்சித்தலைவர் எம்ஜிஆரை ஆறு மாத காலத்திற்கு எம்ஜிஆரை கட்சிகள் குத்தகைக்கு எடுத்துக் கொள்வது அரசியல் கட்சிகளின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் விஜயகாந்த் தன்னைத்தானே கருப்பு எம்ஜிஆர் எனக் கூறிக் கொண்டு வந்த நிலையில் தற்போது அதே பாணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையும் கருத்து எம்ஜிஆர் என அவரது கட்சித் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
அறிஞர் அண்ணா மீது ஈர்ப்பு ஏற்பட்டு தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். பின்னர் திமுகவில் கருத்து வேறுபாடு காரணமாக அதில் இருந்து வெளியேறி அதிமுக என்ற கட்சியை தொடங்கி அதை மாபெரும் அரசியல் சக்தியாக, ஆளும் சக்தியாக உருவாக்கினார். இன்றளவும் மக்களால் நேசிக்கப்படும் புகழ் மங்காது தலைவராக இருந்து வருகிறார். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தாலும் எம்ஜிஆரை ரோல்மாடலாக வைத்து செயல்படுவது புது அரசியல்வாதிகளிடம் ட்ரெண்டாகி வருகிறது. விஜயகாந்த் தேமுதிக கட்சி ஆரம்பித்த போது அவரை கருப்பு எம்ஜிஆர் என்று தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள், விளம்பரம் எழுதி அக்கட்சியினர் எம்ஜிஆரை உரிமை கொண்டாடினர்.
இது அப்போது அதிமுகவினரை எரிச்சலடைய வைத்தது. அதன்பின்னர் அதிமுகவினர் எம்ஜிஆரை அதிகம் கொண்டாட ஆரம்பித்தனர். விஜயகாந்த்தின் இச் செயல் அதிமுகவினரை எம்ஜிஆரை மீண்டும் கையில் எடுக்க வைத்தது. இது ஒரு புறம் உள்ள நிலையில், எல். முருகன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது வேல் யாத்திரை தொடர்பாக வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் தீப்பற்றி எரிந்து முடியும் நேரத்தில் ஒரு புறம் பிஜேபி என்று வரும், மற்றொருபுறம் தாமரைமலர் எம்ஜிஆர் படமும் இடம்பெறும், எம்ஜிஆரின் மறு உருவமாக மோடியைச் சித்தரிக்கும் பாடல் வரிகள் அதில் இடம் பெற்றிருந்தது. எம்ஜிஆருக்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?எம்ஜிஆர் மீது காவி சாயம் பூசுவதாக அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினி அரசியல் வருகை எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பேசப்பட்டது.
ரஜினி அரசியலுக்கு முழுக்குபோட்டுவிட்டார். நடிகர் விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட்டு அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் பேசி வருகின்றனர். பாமக அன்புமணி நடிகர் கமலஹாசன் ஆகியோரும் எம்ஜிஆரை கையிலெடுத்து விளம்பரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசியலுக்கு வந்து ஒரு சில ஆண்டுகளே ஆனா பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அக்கட்சித் தொண்டர்கள் எம்ஜிஆருடன் ஒப்பிடுகின்றனர். இந்நிலையில் மதுரையில் பாஜக நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ள நிலையில் மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் வித்தியாசமான போஸ்டரை பாஜகவினர் ஒட்டியுள்ளனர். எட்டு ஆண்டு சாதனை விளக்க அழைக்கிறார் கருப்து எம்ஜிஆர் அண்ணாமலை என ஒருபுறம் அண்ணாமலையில் புகைப்படமும் மறுபுறம் பாஜக மதுரை மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சரவணன் போலீஸ் உடையில் இருப்பது போன்ற ஒட்டப்பட்டுள்ளது.போஸ்டரும் வைரலாகி வருகினது.