
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதவி பித்து பிடித்து அலைவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவையில் கூட்டுறவு வங்கி வாரவிழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதவி பித்து பிடித்து அலைகிறார். முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் ஸ்டாலின் ஏதேதோ பேசுவதோடு அரசின் மீது இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை எல்லாம் கூறிவருகிறார்.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கடுமையான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துவரும் நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ அவரை கடுமையாக சாடியுள்ளார்.