SPBக்கு பதிலாக அதிமுக எம்.பி.க்கு இரங்கல்.. பாவம் சயின்டிஸ்ட் செல்லூர் ராஜூவே கன்பியூஸ் ஆயிட்டாரு..!

By vinoth kumarFirst Published Sep 26, 2020, 11:45 AM IST
Highlights

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்ததற்கு பதிலாக, தற்போது மாநிலங்களவை எம்பியாக இருந்து வரும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் இறந்ததாக நினைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்ததற்கு பதிலாக, தற்போது மாநிலங்களவை எம்பியாக இருந்து வரும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் இறந்ததாக நினைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர், அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், அப்போது சினிமா பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்ததற்கு பதிலாக, தற்போது மாநிலங்களவை எம்பியாக இருந்து வரும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் இறந்ததாக நினைத்து, அம்மாவின் (ஜெயலலிதா) அன்பையும், ஆதரவையும் பெற்றவர். அம்மா மீது பொய் வழக்கு போட்டபோதெல்லாம் அவருக்கு ஆறுதல் கூறியவர் என உளறி கொட்டினார். 

அப்போது அருகிலிருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இறந்தது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என தெரிவித்தார். அதன்பின் சுதாரித்த அமைச்சர் செல்லூர் ராஜூ நீங்கள் எந்த பாலசுப்பிரமணியத்தை கேட்கிறீர்கள்?. பாடகர் பாலசுப்பிரமணியமா? நாங்கள் ஆய்வு கூட்டத்தை முடித்துக்கொண்டு வந்தவுடன், நீங்கள் பாலசுப்பிரமணியம் என்று கேட்டதால் விவசாய மசோதாவுக்கு எதிராக மாநிலங்களவையில் பேசிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தை பற்றி கேட்கிறீர்களோ என்று நினைத்துவிட்டேன் என்று கூறினார்.

பின்னர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிறந்த பாடகர். லட்சக்கணக்கானோரின் இதயத்தை தனது இனிய குரலால் கட்டிப்போட்டவர். அவருடைய மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

click me!