அதிமுக தொண்டர் ஒரு துளி ரத்தம் சிந்தினால் எதிராளி ஒரு பக்கெட் ரத்தம் சிந்த வேண்டி வரும்... மிரட்டல் தொனியில் பேசும் அமைச்சர்

Published : Nov 13, 2018, 10:32 AM IST
அதிமுக தொண்டர் ஒரு துளி ரத்தம் சிந்தினால் எதிராளி ஒரு பக்கெட் ரத்தம் சிந்த வேண்டி வரும்... மிரட்டல் தொனியில் பேசும் அமைச்சர்

சுருக்கம்

அதிமுக தொண்டர் ஒரு துளி ரத்தம் சிந்தினால், எதிராளி ஒரு பக்கெட் ரத்தம் சிந்த வேண்டி வரும் என பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒரு அமைச்சரே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தொண்டர் ஒரு துளி ரத்தம் சிந்தினால், எதிராளி ஒரு பக்கெட் ரத்தம் சிந்த வேண்டி வரும் என பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒரு அமைச்சரே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக ஆலோசனை கூட்டம் சாத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், உழைக்கும் தொண்டர்களுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்றார். 

அதிமுகவினரை யாரும் அடக்கி ஆள முடியாது. அதிமுக தொண்டன் மீது கை வைத்தால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரித்தார். ஒரு விவசாயி மகன் இன்று தமிழக முதல்வராகி இருக்கிறார். இன்னொரு விவசாயி மகன் துணை முதல்வராக உள்ளார்.

சாத்தூர் தொகுதியை பொறுத்தவரை தலைமை யாரை கைகாட்டுகிறதோ, அந்த வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம், ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம், அதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தவெக வாக்கு மாறியது - த்ரிஷா அம்மாவால் வாக்கு சாவடியில் சலசலப்பு! தேர்தல் கலாட்டாஸ் ஒரு பார்வை!
Ajith Support Vijay?!: "வதந்தி வேண்டாம்" - மாற்றம் தேவையில்லை என அஜித் சொல்லவில்லையாம்.! சட்டென பறந்து வந்த விளக்கம்.!