சந்தி சிரிக்கும் காடுவெட்டி குரு குடும்ப சண்டை! சைலட்டாக வேடிக்கை மட்டும் பார்க்கும் ராமதாஸ்!

By sathish kFirst Published Nov 13, 2018, 9:50 AM IST
Highlights

மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் குடும்ப சொத்துச் சண்டை வீதிக்கு வந்துள்ளத பா.ம.கவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க நிறுவனர் ராமதாசின் வலது கரமாகவும், வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த காடுவெட்டி குரு கடந்த மே மாதம் காலமானார். வட மாவட்டங்களில் மிகப்பெரிய கட்சியான பா.ம.கவின் மிக முக்கியமான தலைவராக இருந்தும் காடுவெட்டி குருவின் குடும்ப சூழல் அவர் மறைவுக்கு பிறகு தான் தெரியவந்தது. பா.ம.க மாவட்டச் செயலாளர்களே பிரமாண்ட வீடு, சொகுசு கார் என்று சுற்றி வந்த நிலையில் காடுவெட்டியில் குரு புதிதாக வீடு கூட கட்டி முடிக்கவில்லை.

மேலும் காடுவெட்டி குரு பெயரிலும் சொல்லிக் கொள்ளும்படியும் பெரிய அளவில் சொத்துகள் எதுவும் இல்லை என்று அப்போது கூறப்பட்டது. இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மனைவி லதாவுக்கும் – காடு வெட்டி குருவின் தாயாருக்கம் இடையே மோதல் ஏற்பட்டது. குரு இருக்கும் போதும் கூட அவரது மனைவிக்கும் – தாயாருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது.

குரு மறைவை தொடர்ந்து அவர் கட்டிய வீட்டில் யார் இருப்பது என்பது தான் பிரச்சனைக்கு முழு காரணம் என்று சொல்லப்படுகிறது. குருவின் தாயார் தனது மகன் கட்டிய வீட்டில் தான் தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் அதனை ஏற்க மறுத்து குருவின் மனைவி லதா பிரச்சனை செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் குருவின் மகன் கனலரசன் தனது பாட்டிக்கு ஆதரவாக செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் கோபித்துக் கொண்டு காடுவெட்டி குருவின் மனைவி லதா சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. காடுவெட்டியில் குரு கட்டிய வீட்டில் இருந்து அவரது தாய் வெளியேறினால் மட்டுமே தான் அங்கு வருவேன் என்று லதா பிடிவாதம் பிடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதனை ஏற்க குரு – லதா தம்பதியினரின் மகன் கனல் அரசன் மறுப்பதாக கூறப்படுகிறது.

அப்படி என்றால் நான் காடுவெட்டிக்கே வரப்போவதில்லை என்று கூறிவிட்டு லதா சென்னையிலேயே தங்கியுள்ளார். கனல் அரசன் பலமுறை வந்து பார்த்தும் லதா தனது முடிவில் உறுதியாக உள்ளார். இந்த நிலையில் காடுவெட்டியில் உள்ள ஊர் பெரியவல்கள் குருவின் தாய் மற்றும் மனைவி லதாவை அழைத்து பேசியுள்ளனர். ஆனால் அதில் தீர்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் குரு கட்டிய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான சிறிய அளவிலான நிலம் போன்றவற்றுக்கு உரிமை கோரி லதா நீதிமன்றம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை எப்படியாவது தடுத்து பாட்டி மற்றும் தாயுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கனல் அரசன் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால் தான் இந்த விவகாரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலையிட வேண்டும் என்று குருவின் மகன் கனலரசன் மட்டும் இல்லாமல் குருவின் மனைவி லதாவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால் இது குடும்ப பிரச்சனை என்பதால் நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்பது ராமதாசின் நிலைப்பாடாக உள்ளது. இதனால் காடுவெட்டி குரு குடும்ப சொத்து பிரச்சனை தற்போது வீதிக்கு வந்துள்ளது. விரைவில் நீதிமன்றத்திற்கும் செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

click me!