ஒலகநாயகனும், உள்ளூர் கெழவனும்... ரா.பா.வின் அடங்கவே அடங்காத ரவுசு!

By Vishnu PriyaFirst Published Mar 17, 2019, 6:09 PM IST
Highlights

லோக்சபா தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் விருதுநகர் தொகுதியில் நிற்பதாக சொல்கிறார்கள். தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வுக்கு கமலெல்லாம் ஒரு பொருட்டே அல்ல: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 

* தேர்தல் எப்போ நடக்குதுங்கிற தேதி கூட மக்களுக்கு தெரியலையே! மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது: சேலம் கலெக்டர் ரோகிணி. 
(தேர்தல்  என்னைக்கு நடந்தா மக்களுக்கு என்ன மேடம் கவலை! ஆனா தேர்தலை ஒட்டி, எந்த தேதியில? எந்த கட்சி? எந்த இடத்துல? எவ்வளவு மதிப்புல? என்ன அன்பளிப்பை? யார் மூலமா? எப்படி கொடுக்கிறாங்க? அப்படிங்கிறதை  தெள்ளத் தெளிவா, பக்காவா தெரிஞ்சு வெச்சிருப்பாங்க. அதுதானே முக்கியம்!)

* லோக்சபா தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் விருதுநகர் தொகுதியில் நிற்பதாக சொல்கிறார்கள். தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வுக்கு கமலெல்லாம் ஒரு பொருட்டே அல்ல: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. (விருதுநகர்ல உங்க கட்சி போட்டி போடலைங்கிற தைரியத்துல ஒலக நாயகனை என்னமோ உள்ளூர் கெழவன் ரேஞ்சுக்கு உதாசீனப்படுத்தி நீங்க பேசிட்டீங்கன்னு எதிர் தரப்புல இருந்து எக்கச்சக்க சவுண்டு வருதே தல! இத இப்புடியே விடக்கூடாது, கமல் விருதுநகரில் களமிறங்கினால் கேப்டனிடம் சொல்லி அட்ஜெஸ்ட் பண்ணிட்டு, நீங்களே எதிர்த்து நின்னு கதறவிடுங்க.)

* தமிழக அரசு பொள்ளாச்சி வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடமிருந்து சி.பி.ஐ.க்கு தானாக மாற்றியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: திருமாவளவன். 
(நீங்க கூடத்தான் சிதம்பரத்துல உதயசூரியன் சின்னத்தில் நிற்காம, தனி சின்னத்தில் நிற்கப்போறீங்க! அப்படின்னா உங்களுக்கும், ஸ்டாலினுக்கும் உரசல் உச்சத்துக்கு போயி முட்டி மோதி இப்படி முடிவெடுத்துட்டீங்களோ?ன்னு நாங்க டவுட் பண்றோமா தல?)

* எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்க இருக்கிறதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அட, நாங்க போட்டியிடுற இடங்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு சின்னம் கொடுத்துப்பாருங்க, அத்தனையையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போமுல்ல! ஜெயிப்போமுல்ல: தங்கதமிழ்செல்வன். (கரீக்ட்டுண்ணே! நமக்கு சின்னமாண்ணே முக்கியம். இந்த தேசத்துல ரூபாய் நோட்டு மேலே ‘குறியீடு மை’ வைக்கிற வசதி இருக்கிற வரைக்கும் நம்ம கட்சிக்கு எந்த சின்னத்தை கொடுத்தாலும், வெயில்ல வெக்கு வெக்குன்னு பிரசாரத்துக்கு போகாம ஜெயிப்போம்ணே.)

* எங்கள் கூட்டணி தேர்தலுக்காக அமைந்த கூட்டணி அல்ல. மக்களின் நன்கைக்காக உருவான கூட்டணி. இந்தியாவுக்கு பொய் சொல்லாத பிரதமர் வேண்டும். அதற்காக அமைந்த கூட்டணி: முத்தரசன். (கெஞ்சி கூத்தாடி வாங்குன ரெண்டு தொகுதிக்கு புதுசா, நம்பிக்கை தர்ற மாதிரி ரெண்டு ஆளுங்களை போட முடியலை. ஏற்கனவே பெஞ்சை தேய்ச்ச ஆளுங்களையே ஒக்கார வெச்ச நீங்களெல்லாம் ’மாற்றம்! முன்னேற்றம்’ பற்றி வாய் பேசலாமா?ன்னு காவிக்காரங்க கழுவிக் கழுவி ஊத்துறாய்ங்க காம்ரேட், கொஞ்சம் எட்டிப் பாருங்க!)

click me!