டி.டி.வி.யால் தென் மாவட்டங்களில் நடுக்கம்..? 10-ல் 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக- திமுக போட்டி..!

By Thiraviaraj RMFirst Published Mar 17, 2019, 5:16 PM IST
Highlights

தென்மாவட்டங்களில் உள்ள பத்து மக்களவை தொகுதிகளில் தலா மூன்று தொகுதிகளி மட்டுமே ஆகப்பெரும் கட்சிகளாக கருதப்படும் அதிமுகவும், திமுகவும் போட்டியிடுகின்றன. தோல்வி பயத்தில் மீதமுள்ள 7 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. 

தென்மாவட்டங்களில் உள்ள பத்து மக்களவை தொகுதிகளில் தலா மூன்று தொகுதிகளி மட்டுமே ஆகப்பெரும் கட்சிகளாக கருதப்படும் அதிமுகவும், திமுகவும் போட்டியிடுகின்றன. தோல்வி பயத்தில் மீதமுள்ள 7 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

தென்மாவட்டங்களில் டி..டி.வி.தினகரனின் அமமுக கணிசமான வாக்குகளைப் பெறும் எனக் கருதப்படுவதால் இரு கட்சிகளும் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள் அப்பகுதி அரசியல் விமர்சகர்கள். தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி இருப்பினும் அதற்கு சசிசமமாக திமுகவுகும் பலமான வாக்கு வங்கியை பெற்றுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர்,தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 தொகுதிகளில் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது 9 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டு வென்றுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில், மதுரையில் 1,97,436 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். திண்டுக்கலில் 1,27,845 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் உதயகுமார் வெற்றி பெற்றார். தேனியில் அதிமுக 3,14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிவகங்கையில் அதிமுக 2,25,144 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. 

இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் பாஜக- காங்கிரஸ் கட்சிகள் மோதுகின்றன. விருதுநகரில் காங்கிரஸ்- தேமுதிக பலம் காட்ட இருக்கின்றன. ராமநாதபுரத்தில் இந்திய முஸ்லீம் லீக் கட்சியும், பாஜகவும் களம் காண்கின்றன. கன்னியாமுமரியில் காங்கிரஸ்- பாஜகவும், மதுரையில் அதிமுக- சிபிஎம், திண்டுக்கல்லில் பாமக- திமுக மோதுகின்றன. தேனியில் காங்கிரஸ்- அதிமுக போட்டியிடுகிறது. தென்காசியில் திமுக- புதிய தமிழகம் பலப்பரீட்சை நடத்துகிறது. கன்னியாகுமரியில் காங்கிரஸ்-பாஜக நேரடியாக மோதுகின்றன. தூத்துக்குடியில் பாஜக -திமுக மோதுகின்றன. 

திண்டுக்கல்லில் திமுக ஸ்டாராங்காக இருப்பதால் பாமகவுக்கு ஒதுக்கி விட்டுள்ளது அதிமுக. அதேபோல் தேனியில் அதிமுக பலமாக இருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி விட்டது திமுக. தென்மாவட்டங்களில் டி.டி.வி.தினகரனின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் இரு கட்சிகளும் தலா மூன்று தொகுதிகளை மட்டுமே வைத்துக் கொண்டு 7 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டுள்ளது. இந்த 10 தொகுதிகளும் அதிமுக- திமுக நேருக்கு நேர் மோதுவது நெல்லையில் மட்டுமே.  

click me!