#BREAKING அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு... உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Mar 4, 2021, 3:14 PM IST
Highlights

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். நீதிபதிகளின் மாறுப்பட்ட கருத்தால் இந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். நீதிபதிகளின் மாறுப்பட்ட கருத்தால் இந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2014ம் ஆண்டு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மகேந்திரன் என்பவர் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 ஏக்கர் நிலத்தை ராஜேந்திர பாலாஜி வாங்கியதாகவும் ஆனால் அதன் உண்மையான மதிப்பு 6 கோடி என்றும் அதேபோல் குறைந்த விலையில் வீட்டு மனை மற்றும் நிலம் வாங்கியதாகவும் அதன் மதிப்பு சந்தை நிலவரப்படி ஒரு கோடி என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறவில்லை. இதனையடுத்து மகேந்திரன் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். நீதிபதி சத்தியநாராயணா ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், அமைச்சர் மீது வழக்கு பதிந்து ஆளுநரிடம் உரிய அனுமதி பெற்று விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

மற்றொரு நீதிபதி ஹேமலதா வழக்குப்பதிய முகாந்திரம் இல்லை, ஆகையால், வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, 2 நீதிபதிகளும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கி உள்ளதால் 3-வது நீதிபதி விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 

click me!