கமல் பாணியில் பேசிய அமைச்சர்…. மத்திய அரசு புயல் நிவாரணம் வழங்கவில்லை என்றால் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை…

Published : Nov 26, 2018, 07:45 AM IST
கமல் பாணியில் பேசிய அமைச்சர்…. மத்திய அரசு  புயல் நிவாரணம் வழங்கவில்லை என்றால் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை…

சுருக்கம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களூக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை எனில், அந்த மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை அமைச்சர் ராஜேந்தி பாலாஜி கடுமையாகப் பேசினார்.

அண்மையில் வீசிய கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், மத்திய குழுவினர் உள்ளிட்டோர் அப்பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் மன்னார்குடி பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வட மாநிலங்களில் பேரிடர் ஏற்பட்டால் அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு தமிழகம் என்றால் கண்டு கொள்வதில்லை என குற்றம்சாடினார்.

தொடர்ந்து தமிழகம் புறக்கணிக்கப்பட்டால் இந்த மக்கள் நாட்டைவிட்டுவெளியேறுவடிதத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் நடிகர் கமல்ஹாசன் பாணியில் பேசினார். மேலும் மத்திய அரசு நிதியுதவி வழங்க சில ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

அதாவது தற்போது எந்தப் போரும் நடக்கவில்லை. போர் நடக்கவும் வாய்ப்பில்லை. எனவே  மத்திய அரசு ராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியை தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கலராம் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..