அதிருப்தி எம்எல்ஏக்களை கவர அதிரடி திட்டம் !! அனைவருக்கும் பதவியை வாரி வழங்க குமாரசாமி அதிரடி முடிவு !!

Published : Jul 08, 2019, 11:55 PM IST
அதிருப்தி எம்எல்ஏக்களை கவர அதிரடி திட்டம் !! அனைவருக்கும் பதவியை வாரி வழங்க  குமாரசாமி  அதிரடி முடிவு !!

சுருக்கம்

கர்நாடகாவில் காங்கிரஸ்  - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை கவர அதிரடி திட்டமான அனைவருக்கும் பதவி வழங்க முதலமைச்சர் குமாராசாமி அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.  

கர்நாடக அரசியல் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், முதல் முறையாக கவுனம் கலைத்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர்  குமாரசாமி, காங்கிரஸ்  அமைச்சர்களை போலவே மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். விரைவில் கர்நாடக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்றார்.

இது தொடர்பாக குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், யாரும் பயப்பட தேவையில்லை. கர்நாடக அரசு தொடர்ந்து சுமூகமாக இயங்கும் என குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தற்போது அரசியல் மாற்றங்கள் குறித்து எனக்கு எந்த வித பயமோ, பதற்றமோ கிடையாது. அரசியல் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. காங்கிரஸ்., அமைச்சர்களை போலவே மஜத அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கர்நாடக அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதன்படி அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அவர்களை சமாதானப்படுத்துவதுடன், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவே காங்கிரஸ்  மற்றும் மஜத கட்சிகள் தங்கள் கட்சி அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிருப்தி எம்எல்ஏ.,க்கு இடமளிக்கவே இந்த அமைச்சரவை மாற்றம் எனவும் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!