வேலூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் யார் ? நாளை அறிவிக்கிறார் கமல்ஹாசன் !!

Published : Jul 08, 2019, 11:37 PM ISTUpdated : Jul 08, 2019, 11:38 PM IST
வேலூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் யார் ? நாளை அறிவிக்கிறார் கமல்ஹாசன் !!

சுருக்கம்

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்  ஏற்கனவே போட்டியிட்ட சுரேசுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.  

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த  புகாரை அடுத்த ரத்து செய்யப்பட்டதேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த தேர்தலில்  தி.மு.க சார்பில் கதிர் ஆனந்த்தும், ., அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்மகமும் போட்டியிடுகின்றனர்.  நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார். அமமுக இந்தப் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.

 இந்த நிலையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம்  இந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆர்.சுரேஷ் இன்று கட்சி அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். அவருடன் ஆலோசனை நடைபெற இருக்கிறது. அவரே மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் அதிகம்.

இது தொடர்பான அறிவிப்பை கமல்ஹாசன் நாளை வெளியிடுவார் எனத் தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!