பெரும்பான்மையை இழந்துட்டீங்க ! இனி பதவியில் தொடரக் கூடாது !! குமாரசாமிக்கு எதிராக பாஜக நாளை ஆர்ப்பாட்டம் !!

Published : Jul 08, 2019, 10:36 PM IST
பெரும்பான்மையை இழந்துட்டீங்க ! இனி பதவியில் தொடரக் கூடாது !!  குமாரசாமிக்கு எதிராக பாஜக நாளை ஆர்ப்பாட்டம் !!

சுருக்கம்

கர்நாடகாவில் ஆட்சியில் நீடிப்பதற்கான பலத்தை இழந்துவிட்ட முதலமைச்சர்  குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாளை கர்நாடகா முழுவதும்  பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.  

கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில், அம்மாநில அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைச்சரவையில்  இடம்பெற்றிருந்த 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் தங்களது அமைச்சர்  பதவிகளை இன்று ஒரே நாளில் ராஜினாமா செய்தனர்.

இதனால், 14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் பெரும்பான்மை பலத்தை இழந்த குமாரசாமியால் முதலமைச்சராக  நீடிக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஆட்சியில் நீடிப்பதற்கான பலத்தை இழந்துவிட்ட முதலமைச்சர்  குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாளை கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என கர்நாடக மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான  எடியூரப்பா  அறிவித்துள்ளார்.

காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்குள் இருந்த பூசல்கள் மோதலாக வெடித்து விட்டதால் பெரும்பான்மையை இழந்துவிட்ட குமாரசாமி இனியும் முதலமைச்சராக  பதவியில் நீடிக்க கூடாது. 

எனவே, நமது மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்காத வகையில் புதிய அரசு அமைவதற்கு வழிவிட்டு, குமாரசாமி உடனடியாக பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி சட்டவிரோதம்.. தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்!
சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!