அத்திவரதரை தரிசித்த ஸ்டாலின் மனைவி ! பயபக்தியுடன் சாமி கும்பிட்டார் !!

Published : Jul 08, 2019, 09:47 PM IST
அத்திவரதரை தரிசித்த ஸ்டாலின் மனைவி ! பயபக்தியுடன் சாமி கும்பிட்டார் !!

சுருக்கம்

திமுக தலைவா் ஸ்டாலினின் மனைவி துா்க்கா ஸ்டாலின் இன்று மாலை காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். விஐபிக்களுக்கான சிறப்பு வழியில் வந்து தரிசனம் செய்துவிட்டு பயபக்தியுடன் மலர்சரம் பெற்றுச் சென்றார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசன திருவிழா  கடந்த 1 ஆம் தேதி  கோலகலமாக தொடங்கியது.
வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதர் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 30 நாட்களுக்கு சயன கோலத்திலும், அதைத் தொடர்ந்து 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார். 

அத்திவரதர் திருவிழாவையொட்டி , தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

8 ஆவது நாளான இன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தார்கள். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று மாலை திடீரென காஞ்கிபுரம் வரதாஜப் பெருமாள் கோவிலுக்கு வந்தார்.

அவரை  கோவில் அர்ச்சகர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் அதிரிவரதரை தரிசனம் செய்தார். விஐபிக்களுக்கான சிறப்பு வழியில் வந்து தரிசனம் செய்துவிட்டு பயபக்தியுடன் மலர்சரம் பெற்றுச் சென்றார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!