நீட் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிக்க தான் இருக்கிறது.. ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் துணிச்சல் பேச்சு !

By Raghupati RFirst Published May 16, 2022, 1:00 PM IST
Highlights

நீட் போன்று நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது . 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர வேண்டும்.பி.ஏ, பி.எஸ்.சி படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு இருக்கக் கூடாது. 

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா  பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் தொடங்கியது. பல்கலைக்கழக வேந்தரான கவர்னர் ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில்  சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.  பின்னர் சென்னை பல்கலைக்கழகம்  பட்டமளிப்பு விழாவில் பேசிய  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'இந்தியாவின் தலைச் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். 

கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என உறுதியாக இருப்பவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி. கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன்.நீட் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக உள்ளது. நீட் உள்ளிட்ட எந்த தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குதான் அவை வழி வகுக்கும்.  

நீட் போன்று நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது . 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர வேண்டும்.பி.ஏ, பி.எஸ்.சி படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு இருக்கக் கூடாது. மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால் பல்கலைக்கழகங்களில்  கல்வி இன்னும் வளரும். அதனால் தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோம்' என்றார். ஆளுநர் ஆர்.என் ரவி முன்னிலையில் அமைச்சர் பொன்முடி இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

இதையும் படிங்க : சாவு பயம் காட்டும் பப்ஸ்.. சவர்மாவுக்கு அடுத்து பப்ஸ்.? தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம் !

இதையும் படிங்க : TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வில் மைனஸ் மார்க் இருக்கு.. மாணவர்கள் ஷாக்.! வெளியான அதிர்ச்சி தகவல் !

click me!